உலகம்

பல்கலை. வாசல் அருகே தற்கொலைப்படை தாக்குதல் #CCTV - அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருக்கு 5 ஆண்டுகள் சிறை!

தற்கொலைப்படை தாக்குதலில் சீனாவை சேர்ந்த 3 பேர் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண் என மொத்தம் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பல்கலை. வாசல் அருகே தற்கொலைப்படை தாக்குதல் #CCTV - அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருக்கு 5 ஆண்டுகள் சிறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பல்கலைக்கழக வாசல் அருகே 'ஆசிரியை’ தற்கொலைப்படை தாக்குதல் - பரபரப்பு காட்சி

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகம் மையத்திற்கு நேற்று காரில் சீன ஆசிரியர்கள் சிலர் வந்தனர். அப்போது, கல்வி மையத்தின் வாசல் அருகே பர்தா அணிந்திருந்து நின்றுகொண்டிருந்த பெண் கார் வந்ததும் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்துள்ளார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் சீனாவை சேர்ந்த 3 பேர் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண் என மொத்தம் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள பலுசிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பு தாக்குதலை நடத்தியது யார் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண் 30 வயதான ஷரி பலோச் என்ற பரம்ஷா. இவர் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய அதிபருடன் ஐ.நா.பொதுச் செயலாளர் குட்டரஸ் சந்திப்பு...மக்களை வெளியேற்ற ஒத்துழைப்பு தருவதாக புதின் உறுதி

ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரில் இரும்பு ஆலை ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ள பொதுமக்களை வெளியேற்றும் ஐ.நா.சபை மற்றும் செஞ்சுலுவை சங்கத்தின் முயற்சிக்கு ரஷ்ய அதிபர் புதின் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளார். ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்டரஸ், ரஷ்ய அதிபர் புதினை மாஸ்கோவில் சந்தித்து பேசினார். அப்போது உக்ரைனில் மரியுபோல் நகரில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ள புதின், உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் போராடி வரும் டான்பாஸ் பிராந்திய பிரச்சனைகளில் முடிவு எட்டப்படாமல் பாதுகாப்பு உத்தரவாதத்தில் கையெழுத்திட முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கணினி கன்னியால் வருத்தமடைந்த கணவர்!

ஹாலோகிராம் வடிவில் கற்பனைக் கதாபாத்திரத்தை மணந்த 'கற்பனையாளர்' ஜப்பானியர் ஒருவர், தனது மனைவியுடன் நான்கு வருடங்கள் பேச முடியாது என்று கூறியுள்ளார். அகிஹிகோ கோண்டோ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கணினியில் ஒருங்கிணைக்கப்பட்ட பாப் பாடகரை மணந்தார். ஆனால் இப்போது அவளுடன் இணைய முடியவில்லை என்று கூறியுள்ளார். 38 வயதான அவர் ஹாட்சுனே மிகுவுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தார், அவர் டர்க்கைஸ் முடியுடன் 16 வயது இளைஞராக பாப் கலாச்சாரத்தில் சித்தரிக்கப்பட்ட்வர் ஆவார்.

உக்ரைனுக்கு நட்பு நாடுகள் வழங்கிய ஆயுதங்களை அழித்த ரஷியா

உக்ரைனின் பல்வேறு பகுதிகளை முற்றுகையிட்டு ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு பல்வேறு பண உதவி மற்றும் ஆயுத உதவியை அளித்து வருகின்றன. இந்நிலையில் அந்த நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அலுமினிய ஆலை அருகே உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவற்றை கடல் தாண்டி தாக்கும் காலிபர் ஏவுகணைகள் மூலம் அழித்ததாக ரஷியா அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு வழங்கப்பட்ட நவீன ஆயுதங்கள் அழிக்கப்பட்டது, அந்நாட்டிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என ரஷியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

ஊழல் வழக்கில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூகி குற்றவாளி என மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயக லீக் கட்சி அரசை கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் கலைத்தது. இதனை தொடர்ந்து அரசின் தலைமை ஆலோசகராக இருந்த ஆங்சான் சூகியும் கைது செய்யப்பட்டார். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது, முறைகேடாக வாக்கி டாக்கி வாங்கியது, மக்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டியது மற்றும் ஊழல் என அவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகளில் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories