தமிழ்நாடு

“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!

“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக‌ம், ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் வாக்குறுதியாக ஏராளமான பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்திருந்தது. அந்த வாக்குறுதியில், விவசாயிகளின் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என தவெக அரசு அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளின் பயிர் கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்யாமல் சொற்பமான அளவிலேயே கடனை தள்ளுபடி செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் கண்டனங்கள் தெரிவித்து வரும்போதிலும் அதனை செவி சாய்க்காமல் தவெக அரசு இருந்து வருகிறது.

மேலும் தொடர்ந்து விவசாயிகளும், கண்டனங்கள், வலியுறுத்தல்கள், போராட்டங்கள் என செய்து வந்தாலும், அவர்களையும் கண்டும் காணாததுமாய் இருந்து வரும் தவெக அரசு, மற்ற கட்சியினரை குதிரை பேரம் மூலம் தனது கட்சிக்கு இழுபதையும், திமுக மீது ஆதாரமற்ற, அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதையுமே வாடிக்கையாக வைத்து வருகிறது.

“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இன்று தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி புதுப்பேட்டை லாங்க்ஸ் கார்டன் சாலையில் இருந்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் வரை பேரணியாக நடந்து சென்றனர்.

அப்போது, தவெக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளை ஏமாற்றாமல், விவசாயிகளுக்கான பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோஷமிட்டு கொண்டே பேரணியாக நடந்து சென்றனர். மேலும் இந்த அரசு இதெல்லாம் நிறைவேற்றாத பட்சத்தில், பட்ஜெட் கூட்டத்தின் போது சட்டமன்ற வளாகம் முன் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உதயகுமார் பேசியதாவது :-

தமிழக வெற்றிக் கழகம் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில், முதலமைச்சர் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதாக கூறினார். அதன்படி அனைத்து விவசாயிகளின் அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். யானை, பன்றி, மான் போன்ற காட்டு விலங்குகளால் பயிர்கள் முற்றிலுமாக சேதம் அடைகிறது.

பருவ காலங்களில் மழை இல்லாததாலும் பயிர்கள் சேதம் அடைகிறது. இதனால் தான் விவசாயிகள் கடன் நிவாரணம் கேட்கிறார்கள். அத்துடன் இதற்கு முந்தைய திமுக, அதிமுக ஆட்சி காலங்களில் பயிர் கடன்கள் உள்ளிட்ட பல கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் தான் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்ததை போன்று தமிழ்நாட்டில் நடக்கவில்லை.

விவசாயிகளையும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு, உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும், விவசாயிகள் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இதையெல்லாம் அரசு நிறைவேற்றாத பட்சத்தில், வரும் பட்ஜெட் கூட்டத்தின் போது சட்டமன்ற வளாகம் முன் விவசாயிகள் போராட்டம் நடைபெறும்." என்றார்.

banner

Related Stories

Related Stories