தமிழ்நாடு

“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!

“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜூன் மாதம் முழுவதும் மாவட்டத்தில் சுமார் 256 நிகழ்ச்சிகள் நடத்தி, புத்தெழுச்சி நாளை புத்துணர்ச்சியுடன் கொண்டாடிய கழக நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கழக இளைஞரணி செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கழக நிர்வாகிகள் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டி  சிறப்புரையாற்றினார்.

“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!

அப்போது கழக இளைஞரணி செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது வருமாறு :-

மே 4 தேர்தல் ரிசல்ட் வந்து 2 மாதங்களை தாண்டி விட்டோம். 2 மாதங்களிலும் காலையிலும் மாலையிலும் நிர்வாகிகள் வருகிறார்கள். அவர்களை சந்தித்து வருகிறேன். மயிலை த.வேலு என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். சென்னை தென்மேற்கு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான மாவட்டம்.

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறேன் என்றால், கழக தலைவரை எந்த அளவுக்கு மிஸ் பண்ணுகிறேனோ, அதே அளவுக்கு அன்பழகன் அவர்களையும் மிஸ் பண்ணுறேன். என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர் அவர். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடந்தது. அதன் பிறகு நடந்த சில கூட்டங்களை அடுத்து தேர்தலுக்கு பிறகு முதல் கழக கூட்டம் இது.

கலைஞரின் பிறந்த நாள் முன்னிட்டு 256 நிகழ்ச்சியை நடத்தியுள்ளீர்கள். ஆட்சியில் இல்லாவிட்டாலும் கழக தலைவருக்கு நிகழ்ச்சி நடத்துவோம் என்று காட்டி உள்ளீர்கள். 103-வது கலைஞரின் பிறந்தநாள் விழாவில் 256 நிகழ்ச்சிகள் நடத்தி  இருக்கிறீர்கள். ஆட்சியில் இருக்கும் பொழுது நடத்துவதை காட்டிலும் ஆட்சி இல்லாத போது நடத்துவது தான் பெருமை வாய்ந்தது.

“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!

வெற்றியோ, தோல்வியோ வீதிக்கு வந்து மக்களுக்காக உழைப்பவர்கள் தான் கலைஞரின் உண்மையான உடன்பிறப்புகள் என்று மீண்டும் மீண்டும் நாம் நிரூபிப்போம்! நாம் சந்திக்காத வெற்றியும் இல்லை, நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. வெற்றி வந்துவிட்டால் தலைக்கனத்தில் ஆடியதும் கிடையாது... தோற்றுப் போனால் வீட்டில் முடங்கி அழுததும் கிடையாது. என்றுமே மக்கள் பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் திராவிட முன்னேற்றக் கழகம்!

தேர்தலுக்கு பிறகு என்னென்ன கூத்து நடக்கிறது என்று அன்றாடம் நாம் செய்திகளில் பார்க்க முடிகிறது. அதிமுகவை உடைத்துவிட்டார்கள். ஆனால் திமுகவை தொட முடிந்ததா? யாராலயும், எந்த கொம்பனாலும் தொட நினைத்துக்கூட பார்க்க முடியாது. திமுகவை சீண்டி பார்க்க முடியவில்லையே.. என்று நினைத்து தான் தினமும் நம் மீது அவதூறு பரப்புகிறார்கள்.

இந்த ஆட்சியில் இதுவரை மக்களுக்கான எந்த திட்டத்தையாவது கொடுத்திருக்கிறார்களா? நம் தலைவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் நாள் முதல் கையெழுத்து மகளிருக்கான திட்டம். இன்றைக்கு இருக்கும் ஆட்சி என்ன செய்கிறது? ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து விட்டோம் என்று எதற்கெடுத்தாலும் ரீல்ஸ் மட்டுமே போடுகிறது.

“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!

அமைச்சர்கள் எங்கே சென்றாலும் ரீல்ஸ் போடுகிறார்கள். எங்கே பார்த்தாலும் கரன்ட் கட். திரும்பும் இடமெல்லாம் பாலியல் வன்கொடுமை. ஆளுங்கட்சியினரே குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். தவெக அமைச்சர், கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது போதை பொருள் பயன்படுத்துகிறார். கேட்டால் குழந்தைக்கு மாத்திரை என சொல்கிறார். அந்த அமைச்சர் மீது இந்த அரசு எதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் கூட லஞ்சம் பெற்றதாக ஊழல் புகார். அதுவும் நாம் சொல்லவில்லை. தவெக கட்சியில் உள்ள வழக்கறிஞரே கூறுகிறார். சட்டமன்றத்தில் எதிரே பார்த்தால், திருட்டு VCD விற்றவர், Black-ல் டிக்கெட் விற்றவர், Black-ல் லாட்டரி விற்றவர் எல்லாம் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெயரை குறிப்பிட தேவையில்லை, அவர்கள் யாரென்று மக்களுக்கே தெரியும். குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தான் இன்று அமைச்சர்களாக இருக்கிறார்கள். இவர்கள் யாரென்று முதலமைச்சருக்கும் தெரியவில்லை, மக்களுக்கும் தெரியவில்லை, எங்களுக்கும் தெரியவில்லை.

இன்றைக்கு தன்னெழுச்சியாக நம் கழகத்தில் இயங்கக்கூடிய Gen Z இளைஞர்களை Target செய்து, அவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து பயமுறுத்தப் பார்க்கிறது இந்த அரசு. நான் இந்த அரசுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் அல்ல, உங்கள் தாத்தாவே வந்தாலும் திமுக காரனை பயமுறுத்த முடியாது.

“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!

நேற்று முன்தினம் அனிதா ராதாகிருஷ்ணனை அழைத்து கைது செய்து, அவருக்கு சோபா தருவதாக கூறியுள்ளார்கள். ஆனால் அவர் "எனக்கு சோபா எல்லாம் வேண்டாம்" என்று சொல்லி விட்டார். கவுண்டமணி, செந்தில் இளநீர் நகைச்சுவை போன்று தவெக அரசு செய்து கொண்டிருக்கிறது

சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்கள் "விடமாட்டேன்... தொட மாட்டேன்.." என்றெல்லாம் பேசினார். அதற்கு அர்த்தம் இப்போது தான் புரிகிறது. அவர் ஊழல் வழக்கில் உள்ள அதிமுகவினரை ஒருவரையும் தொடவிடமாட்டேன். நானே இழுத்துக் கொண்டு வந்து விடுவேன் என்ற அர்த்தத்திலே அவர் கூறியுள்ளார். பாஜகவின் மிகப்பெரிய வாஷிங் மெஷினுக்கு போட்டியாக, சின்ன வாஷிங்மெஷினாக தவெக வந்துள்ளது.

“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!

கடந்த தேர்தலில் நாம் எதிரி யார் என்று தெரியாமல் இருந்தோம். எதிரியை தோற்கடித்தோம். வெளியில் சென்று ஓட்டு கேட்டோம். வீட்டுக்குள் கேட்காமல் விட்டு விட்டோம். நானே 40 நாட்கள் பிரச்சாரம் செய்தேன். அப்போது எதிரி யார் என்று தெரியவில்லை. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்.

பதவி என்பது நம் தோலில் உள்ள துண்டு. கொள்கை என்பது இடுப்பில் கட்டி இருக்கும் வேட்டி போன்றது. என்றும் நமக்கு கொள்கை தான் முக்கியம். என்றும் களத்தில் நிற்போம். மீண்டும் நம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம்." என்றார்.

banner

Related Stories

Related Stories