சினிமா

5in1Cinemas : 7 ஆண்டுகளுக்கு பின் இயக்கத்துக்கு யு-டர்ன் போட்ட நடிகர்.. பாலிவுட்-க்கு பறந்த பீஸ்ட் நாயகி!

5in1Cinemas : 7 ஆண்டுகளுக்கு பின் இயக்கத்துக்கு யு-டர்ன் போட்ட நடிகர்.. பாலிவுட்-க்கு பறந்த பீஸ்ட் நாயகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. 7 ஆண்டுகளுக்கு பின் திரைப்படம் இயக்கும் நடிகர் !

தமிழ் சினிமா துறையில் சமூக கருத்துகள் நிறைந்த படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நடிகராகவும் இயக்குநராகவும் வெற்றிக்கண்டவர் சமுத்திரகனி. தமிழில் கடைசியாக இவரது இயக்கத்தில் வினோதய சித்தம் எனும் படம் வெளியாகிருந்தது.

தற்போது இவர் 7ஆண்டுகள் கழித்து தெலுங்கில் ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார், அந்த படத்தில் நடிகர் பவண் கல்யாண் நாயகனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படம் வினோத் சித்தம் என்ற படத்தின் ரீமேக் என்ற தகவலும் வெளியாகிறது.

2. பிரபாஸுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா...

தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவரும் ராஷ்மிகா மந்தனா தமிழிலும் கவணம் செலுத்தி வருகிறார். புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகையாகிவிட்ட இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும், இந்தியில் மிஷன் மஜ்னு, குட்பை, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவற்றை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கவுள்ளார். இப்படத்தை அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ஸ்பிரிட் எனப் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

3. மீண்டும் இணையும் ‘ராட்சசன்’ பட ஜோடி...

இயக்குநர் ஹலிதா ஷமீம் தற்போது ‘மின்மினி’ என்ற புதுமையான பீரியட் படத்தை இயக்கி வருகிறார். கடந்த 6 வருடங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரங்களுடன் தொடங்கிய ‘மின்மினி’ திரைப்படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அந்த குழந்தை நட்சத்திரங்கள் இளைஞர்களாக வளரும் வரை காத்திருந்து படத்தின் இரண்டாம் பாதியை தற்போது இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும், இருவரும் இந்த கதையின் திருப்புமுனைக்கு உதவும் கேரக்டர்களில் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

4. சல்மான் கானுடன் ஜோடி சேரும் நடிகை பூஜா ஹெக்டே...

அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’வீரம்’ திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு துவங்கி அதில் சல்மான் கான் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தமன்னா கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் நாயகி பூஜா ஹெக்டே இணைந்து உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. ‘கபி ஈத் கபி தீவாளி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்து உள்ளதாக பூஜா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

5. நாக சைதன்யாவின் ‘தேங்க்யூ’ படத்தின் ரிலீஸ் தேதி...

தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான நாகசைதன்யா நடிப்பில் ‘லால் சிங் சத்தா’, ‘தேங்க்யூ’ வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் தேங்க்யூ திரைப்படம் வரும் ஜூலை 8ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories