
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, இன்று (அக்.30) இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
அதற்கு முன்னதாக, மதுரைக்கு சென்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (அக்.30) திருப்பரங்குன்றம் தொகுதியைச் சேர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் பத்துக்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகித் தங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

அவ்வாறு கழகத்தில் இணைந்தவர்களில், அ.தி.மு.க. திருப்பரங்குன்றம் கிழக்குப் பகுதிச் செயலாளர் வழக்கறிஞர் எம்.ரமேஷ், திருப்பரங்குன்றம் நிலையூர் ஒன்றியச் செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.சேதுராமன்;
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜெய பிரசன்னா, திருப்பரங்குன்றம் விவசாயப் பிரிவுச் செயலாளர் பி.பாண்டி, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் கவிஞர் பி.மோகன்தாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.






