தமிழ்நாடு

மோசடிப் பேர்வழியுடன் 'டம்மி' முதலமைச்சர் விஜய்க்கு என்ன ரகசியக் கூட்டணி? : DMK IT Wing கேள்வி!

த.வெ.க நிகழ்ச்சிகளுக்கும் இவரது பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதன் மர்மம் என்ன?

மோசடிப் பேர்வழியுடன் 'டம்மி' முதலமைச்சர் விஜய்க்கு என்ன ரகசியக் கூட்டணி? : DMK IT Wing கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

5,000 கோடி ரூபாய் நிதி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவுச் சங்கத்தின் (BLM) தலைவர் பிரேம்குமாரை, கோழிக்கோடு குற்றப்பிரிவின் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையால் சென்னையில் கைது செய்தனர்.

கைதாகி இருக்கும் பிரேம்குமார், முதலமைச்சர் விஜயை சந்தித்த புகைப்படங்கள் அண்மையில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இவருக்கும், த.வெ.கவும் என்ன தொடர்பு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில், மோசடிப் பேர்வழியுடன் 'டம்மி' முதலமைச்சர் விஜய்க்கு என்ன ரகசியக் கூட்டணி? என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ” 5000 கோடி ரூபாய் முதலீட்டைச் சுருட்டித் தன் சொந்தக் கணக்கில் பதுக்கிய BLM பிரேம்குமாரைக் கேரள காவல்துறை கைது செய்துள்ள நிலையில்... அந்த மாபெரும் மோசடிப் பேர்வழியுடன் 'டம்மி' முதலமைச்சர் விஜய்க்கு என்ன ரகசியக் கூட்டணி?

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எம்.எல்.ஏ-க்களை கூட்டிவந்தது இதே மோசடிப் பேர்வழி பிரேம்குமாருக்குச் சொந்தமான பேருந்துகளில்தானே? தவெக நிகழ்ச்சிகளுக்கும் இவரது பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதன் மர்மம் என்ன?

கூட்டனிக்கு 'சோபா' சப்ளை செய்தது, எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியது, இடைத்தேர்தல்களில் பணத்தை வாரி இறைத்தது, என ஒட்டுமொத்த தவெகவின் ஜனநாயகப் படுகொலைகளுக்கும் ஃபைனான்ஸ் செய்தது மக்களின் இரத்தத்தை உறிஞ்சிய இந்த 5000 கோடி ஊழல் பணம்தானா?" என தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories