தமிழ்நாடு

“தேவர் திருமகனாரின் புகழ் வாழ்க...” : பசும்பொன்னில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்குச் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.

“தேவர் திருமகனாரின் புகழ் வாழ்க...” : பசும்பொன்னில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சுதந்திரப் போராட்ட வீரரும், அரசியல் தளத்தில் தனித்துவமான பங்களிப்பை ஆற்றியவருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை இன்று (அக்.30) கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்குச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்குள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.

“தேவர் திருமகனாரின் புகழ் வாழ்க...” : பசும்பொன்னில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், "வரலாறாய் வாழ்ந்து, வீரத்துக்கும் தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாக நிலைத்து நிற்கும் பசும்பொன் திருமகனாரைப் போற்றுகிறேன்!

விடுதலைப் போரில் நேதாஜியுடன் இணைந்து செயலாற்றிய தீரர்! குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராளி! உழவர்களின் நலனுக்காகவும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் சங்கங்களை நிறுவியவர்; போராடிச் சிறை சென்ற தியாகி!

சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மக்களுக்காகக் குரல் கொடுத்த மாண்பாளர்! “பத்தரை மாற்றுத் தங்கம்! பசும்பொன் சிங்கம்!” என்று மக்களால் போற்றப்பட்ட பசும்பொன் திருமகனாரின் புகழ் வாழ்க!

banner

Related Stories

Related Stories