சினிமா

Marvel Universe ஆக உருவெடுக்கும் KGF 3 : அடுத்த Part எப்படி இருக்கப்போகிறது? Update கொடுத்த தயாரிப்பாளர்!

KGF 3 படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

Marvel Universe ஆக உருவெடுக்கும் KGF 3 : அடுத்த Part எப்படி இருக்கப்போகிறது? Update கொடுத்த தயாரிப்பாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னடத்தில் பிரசாந்த் நீல் இயக்கிய KGF படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

KGF 1 படத்திலேயே KGF 2 இரண்டாம் பாகத்திற்கான தொடக்கமும் இடம் பெற்றிருந்தது. இதனால் KGF 2 படத்தின் மீதான ஆவல் அப்போதே ரசிகர்களுக்கு அதிகரித்தது. இதையடுத்து கொரோனா காரணமாகப் படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டே வந்தது.

பின்னர் ஒரு வழியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் மாதம் KGF 2 படம் வெளியோ ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 10,000 திரைகளில் வெளியாகி ரூ.1,200 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

KGF 2 படத்தின் இறுதி காட்சியில் KGF 3 அடுத்த பாகத்திற்கான லீட் காட்சிகள் இருந்ததால் KGF ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். KGF 3 படம் எப்போது வெளியாகும் என்ற ஆவல் இப்போதில் இருந்தே எழுந்துள்ளது.

இதனிடையே கேஜிஎஃப்-2 ட்ரெய்லர் வெளியீட்டின் பொது 3ம் பாகம் வெளியாக 8 ஆண்டுகளாவது ஆகும் இயக்குநர் பிரசாந்த் நீல் எனக் கூறியிருந்தார். மேலும் பிரபாஸ் உடனான சலார் பட வேலைகள் முடிந்து பிறகு KGF 3 படத்தின் பணிகள் தொடங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

இந்நிலையில், KGF படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் KGF 3 படத்தின் ஷூட்டிங் ஆரம்பம் ஆகும் என்றும் 2024-ல் படத்தை வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் KGF 3 மூலம் இந்திய சினிமாவிற்கு 'நாங்கள் ஒரு மார்வெல் வகையான பிரபஞ்சத்தை உருவாக்கப் போகிறோம்' எனவும் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அடுத்து KGF ரசிகர்கள் KGF 3 படத்திற்கான தகவலை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories