சினிமா

'தசாவதாரம் 2-க்கு வாய்ப்பே இல்லை'.. கே.எஸ். ரவிக்குமார் ஓபன் டாக்: அமேசான் ப்ரைமில் 'ஆச்சார்யா'!

அமேசான் ப்ரைமில் ஓடிடி தளத்தில் மே 20 ஆம் தேதி ஆச்சார்யா படம் வெளியாகிறது.

'தசாவதாரம் 2-க்கு வாய்ப்பே இல்லை'.. கே.எஸ். ரவிக்குமார் ஓபன் டாக்: அமேசான் ப்ரைமில் 'ஆச்சார்யா'!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. ‘தசவதாரம் 2’ எடுக்க மாட்டேன்!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ஹிட்டாகிருந்த திரைப்படம் ‘தசவதாரம்’. கமல் 10 வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கே.எஸ். ரவிகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது “எங்கள் இருவருக்கும் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் தசாவதாரம் போன்ற இன்னொரு படத்தை உருவாக்கவே முடியாது. எனவே தசாவதாரம் 2’க்கு வாய்ப்பே இல்லை.” என பதிலளித்துள்ளார்.

'தசாவதாரம் 2-க்கு வாய்ப்பே இல்லை'.. கே.எஸ். ரவிக்குமார் ஓபன் டாக்: அமேசான் ப்ரைமில் 'ஆச்சார்யா'!

2. தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்த ‘ஹரா’ படக்குழு

80களில் பல வெற்றி படங்களில் நடித்த மைக் மோகன் கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஹரா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் படக்குழு தமிழக முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். “ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதை போல தமிழகமும் பெண்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து நாட்டிற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்”.

3. ஓடிடியில் ஆச்சார்யா!

ராம்சரண் & சிரஞ்சீவி நடிப்பில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான ஆச்சார்யா படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கொரட்டாலா சிவா இயக்கியுள்ள இந்த படத்துக்கு மணி ஷர்மா இசையமைத்துள்ளார். இதையடுத்து இந்த படம் தற்போது ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைமில் வரும் மே 20 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4. கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாக்விருக்கும் ‘வேட்டுவம்’ பட போஸ்டர்...

சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது மற்றும் விக்ரம் நடிப்பில் ஒரு படம் உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் மற்றொரு புதிய படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ‘வேட்டுவம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரான்ஸில் நடைப்பெற இருக்கும் போஸ்டரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

5. நாளை வெளியாகவிருக்கும் ‘விக்ரம்’ படத்தின் ட்ரைலர்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ‘பத்தல பத்தல’ பாடல் வெளியாகி வைரலான நிலையில் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டை நாளை படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories