சினிமா

‘ரீஎண்ட்ரி’ கொடுத்த கவுண்டமணி.. எழுந்து நின்று வரவேற்பு அளித்த திரையுலகம்: சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்!

நடிகர் கவுண்டமணியைப் பார்த்து அங்கிருந்த அத்தனை நடிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.

‘ரீஎண்ட்ரி’ கொடுத்த கவுண்டமணி.. எழுந்து நின்று வரவேற்பு அளித்த திரையுலகம்: சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை அடையாரில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில், மறைந்த நடிகர் ஐசரி வேலன் அவர்களின் 35 வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலையை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். இந்த விழாவிற்கு தென்னிந்திய திரையுலகைச் சார்ந்த நடிகர்கள், நடிகைகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்தநிலையில் அரங்கத்திற்கு வந்த நடிகர் கவுண்டமணியைப் பார்த்து அங்கிருந்த அத்தனை நடிகர்களும் உற்சாகம் அடைந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாகவும், சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தவர் நடிகர் கவுண்டமணி. அன்றும், இன்றும், என்றும் அவருடைய காமெடிக்கு எவரும் நிகரில்லை என்று தான் சொல்லவேண்டும். காமெடி என்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவருக்கும் நினைவுக்கு வருவது கவுண்டமணி தான். அந்தளவிற்கு நகைச்சுவை திறமையின் மூலன் மக்களை தன்வசப்படுத்தியுள்ளார்.

நீண்ட நாட்களாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அந்த இடம் மொத்தத்தையும் எளிதில் கவர்ந்திழுக்க கூடியவர் கவுண்டமணி.

இதனைத் தொடர்ந்து மேடையில் ஐசரி வேலன் குறித்து பேசிய கவுண்டமணி, “ எல்லாருக்கும் தனி தனியா சொல்லிட்டு இருக்க முடியாது, அரங்கத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். ஐசரி வேலன் மறைந்துவிட்டார் என்ற வெடிகுண்டு ஒன்று விழுந்தது. அந்த அதிர்ச்சியை என்னால் தாங்க முடியவில்லை. அவரைத் தொடர்ந்து அவரது மகனும் வானளவு வளர வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.

நடிகர் கமல், ராதிகா, பாக்கியராஜ், பிரஷாந்த், லதா என எவ்வளவு பேர் பெற்ற நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி அவர்களின் எண்ட்ரீ தான் அனைவரையும் உற்சாகப்படுத்தியது. வயதாகிவிட்டது, நடக்க முடியவில்லை, பொறுமையான பேச்சு தான் என்றாலும் கூட காமெடிக்கு ராஜாவாகவே எப்பொழுதும் இருக்கிறார் கவுண்டமணி. தமிழ் திரையுலகில் சின்ன நடிகர்கள், தொடங்கி பெரிய நடிகர்கள் வரை அனைவரையும் கலாய்த்து தள்ளும் ஒரே நடிகரும் கவுண்மணி தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

banner

Related Stories

Related Stories