சினிமா

“கதையை கேட்டதும் உடனே தேதிகளை ஒதுக்கிய நடிகர் ஜீவா..” : மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி !

விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற களத்தின் சந்திப்போம் படத்தின் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கதையை கேட்டதும் உடனே தேதிகளை ஒதுக்கிய நடிகர் ஜீவா..” : மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடிகர் ஜீவா பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியிருப்பதாலும், ஒரு இந்தி படத்தை கைவசம் வைத்திருப்பதாலும் கோலிவுட்டிலேயே பிஸியான நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில் ஏற்கனவே ஜீவாவோடு இணைந்து களத்தில் சந்திப்போம் என்கிற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குனர் ராஜசேகர் கூறிய கதை ஜீவாவிற்கு மிகவும் பிடித்துப்போக, மற்ற படங்களுக்கெல்லாம் முன்னரே இந்தப் படத்திற்காகத் தேதிகளை ஒதுக்கியுள்ளாராம் ஜீவா.

'அஜித் 61' படத்திற்கு இசையமைத்து வரும் ஜிப்ரான் அப்படத்தின் வேலைகளிக்கு இடையே இப்படத்திற்கு இசை அமைக்கிறார். படப்பிடிப்பிற்கான பணிகள் மிக மும்மரமாக நடைப்பெற்று வருவதாகவும், 2,3 மாதங்களில் படப்பிடிப்பு முடிவடைந்து, படம் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MIK புரொடக்‌ஷன்ஸும் 7 Miles per Second நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கதாநாயகி மற்றும் பிற முக்கியப் பாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றுகிறது. விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற களத்தின் சந்திப்போம் படத்தின் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories