அரசியல்

“படித்தவர்களின் வாக்குகளால் தோற்றோம்!” : உ.பி. பா.ஜ.க அமைச்சர் ஓம் பிரகாஷ் பேச்சு!

பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்குட்பட்ட இரு சட்டமேலவை இடங்களிலும் சமாஜ்வாதி கட்சி அபார வெற்றிபெற்றதால், பா.ஜ.க அதிர்ச்சி!

“படித்தவர்களின் வாக்குகளால் தோற்றோம்!” : உ.பி. பா.ஜ.க அமைச்சர் ஓம் பிரகாஷ் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.விற்கு எதிரான மனநிலை மக்களிடையே நிலவுகிறது என்பது நாடாளுமன்றத் தேர்தல், சட்டமேலவை தேர்தல் என ஒவ்வொரு தேர்தல்களின் வழியும் வெளிப்பட்டு வருகிறது.

அதிலும், குறிப்பாக பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில், பா.ஜ.க.வின் செல்வாக்கு மங்கி வருவது, அண்மையில் நடந்துமுடிந்த சட்டமேலவை தேர்தலில் அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.

வாரணாசி தொகுதிக்குட்பட்ட இரு சட்டமேலவை இடங்களிலும் சமாஜ்வாதி கட்சி அபார வெற்றிபெற்று, பா.ஜ.க.விற்கு படுதோல்வியை பரிசாக அளித்துள்ளது.

“படித்தவர்களின் வாக்குகளால் தோற்றோம்!” : உ.பி. பா.ஜ.க அமைச்சர் ஓம் பிரகாஷ் பேச்சு!

இதனால், உத்தரப் பிரதேசத்தில் நடந்த 11 சட்டமேலவை இடங்களுக்கான தேர்தலில் 6 இடங்களை பா.ஜ.க கைப்பற்றியிருந்தாலும், அது பா.ஜ.க.விற்கு மகிழ்ச்சி தருவதாய் அமையவில்லை.

இந்நிலையில், இது குறித்து பேசிய உத்தரப் பிரதேசத்தின் பா.ஜ.க அமைச்சர் ஓம் பிரகாஷ், “வாரணாசி தொகுதியில் படித்தவர்கள் வாக்களித்ததால், இரு சட்டமேலவை இடங்களிலும் பா.ஜ.க தோல்விடைந்துள்ளது. இந்த படித்தவர்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வரமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

படித்தவர்கள் பா.ஜ.க.விற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற மனநிலையை, பா.ஜ.க அமைச்சர்களே பொதுவெளியில் வெளிப்படுத்தி வருவது, தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories