தமிழ்நாடு

கைது செய்ய வந்த கேரள போலீஸ்: நெஞ்சு வலி என்று நாடகமாடிய BLM பிரேம்குமார் - நடந்தது என்ன?

கைது நடவடிக்கையின் போது, பிரேம்குமார் நெஞ்சு வலி என்று நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

கைது செய்ய வந்த கேரள போலீஸ்: நெஞ்சு வலி என்று நாடகமாடிய BLM பிரேம்குமார் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

5,000 கோடி ரூபாய் நிதி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவுச் சங்கத்தின் (BLM) தலைவர் பிரேம்குமாரை, கோழிக்கோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று சென்னையில் அதிரடியாகக் கைது செய்தனர்.

இந்தக் கைது நடவடிக்கையின் போது, சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க பிரேம்குமார் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, போலீசார் அவரை உடனடியாக வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு விரிவான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், அவரது உடல்நிலை முற்றிலும் சீராக இருப்பது தெரியவந்தது. இதன் மூலம், போலீசாரின் கைதைத் தற்காலிகமாகத் தள்ளிப்போடுவதற்காக அவர் நெஞ்சு வலி என நாடகமாடியது அம்பலமானது.

இதையடுத்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற அனுமதிக்குப் பிறகு, மேலதிக விசாரணைக்காகப் போலீசார் அவரை கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இந்த கூட்டுறவு சங்கத்தை நடத்தி, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகளைப் பெற்றுள்ளார் பிரேம்குமார். அந்தப் பணத்தை ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் திரையரங்குகளை வாங்குவதற்காகத் தனது தனிப்பட்ட கணக்குகளுக்குத் திருப்பி மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கைதாகி இருக்கும் பிரேம்குமார், தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து, இவருக்கும். த.வெ.க-வுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

மிகப்பெரிய அளவிலான இந்த மோசடி விவகாரத்தில், மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ (CBI) மற்றும் அமலாக்கத்துறை (ED) ஆகியவை நேரடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories