தமிழ்நாடு

CBSE-க்கு முன்னுரிமை... நீட் தேர்வே ஒரு பெரிய மோசடி : அதிகாரப்பூர்வமாக வெளியான பகீர் தகவல்!

2017-18 ஆம் கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு CBSE மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது என்ற தகவல் ஆர்டிஐ மூலம் கிடைத்துள்ளது.

CBSE-க்கு முன்னுரிமை... நீட் தேர்வே ஒரு பெரிய மோசடி : அதிகாரப்பூர்வமாக வெளியான பகீர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மருத்துவக் கனவை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் அம்பலமாகியுள்ளன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, (02.10.2026 - Ref. No. 4506/SC8 I (1)/2026 பெறப்பட்ட எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை குறித்த அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது, தமிழ்நாட்டில் நீட் தேர்வு அமலுக்கு வந்த பின்னர் மருத்துவ படிப்புகளில் CBSE மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவல் அதிகாரப்பூர்வாமக வெளியாகி இருக்கிறது.

முன்பு - நீட் நிலை (Pre - NEET) : தமிழ்நாட்டில் நீட் தேர்வு அமலாவதற்கு முந்தைய ஆண்டுகளில் 2010-11 முதல் 2016-17 வரை மருத்துவ படிப்பில் சேர்ந்த ஒன்றிய அரசின் CBSE பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 35 என்ற எண்ணிக்கையில் மட்டுமே (மொத்த மாணவர் சேர்க்கையில் 0.06% முதல் 0.97%) இருந்தது.

பின்பு - நீட் நிலை (Post - NEET) : 2017-18 ஆம் கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு CBSE மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது என்ற தகவல் ஆர்டிஐ மூலம் கிடைத்துள்ளது.

CBSE-க்கு முன்னுரிமை... நீட் தேர்வே ஒரு பெரிய மோசடி : அதிகாரப்பூர்வமாக வெளியான பகீர் தகவல்!

அதாவது, 2017 ஆம் ஆண்டில் 1,113 CBSE மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். 2026 ஆம் ஆண்டில் CBSE மாணவர்கள் 5,134 இடங்களை கைப்பற்றி இருக்கிறார்கள். ஆனால், மாநில பாடத்திட்ட மாணவர்கள் 3,776 பேர் மட்டுமே, மருத்துவப் படிப்பில் சேர முடிந்துள்ளது. தற்போதைய மாணவர் சேர்க்கையில் CBSE மாணவர்களின் ஒட்டுமொத்த பங்கு 56 சதவிகிதமாக உயர்ந்து பெரும்பான்மையாக உருவெடுத்துள்ளது.

இந்தத் தரவுகள், நீட் தேர்வு பாடங்கள், தேசிய அளவிலான CBSE பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அது மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது என்ற அறிவியல் பூர்மான உண்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட 9 பேர் கொண்ட குழு, அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ‘’நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’’ என்று அறிக்கை சமர்பித்தது. தற்போது, வெளியாகி இருக்கும் ஆர்.டி.ஐ அறிக்கை தகவல்கள் நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவதை ஆதாரப்பூர்வமாக வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்.

banner

Related Stories

Related Stories