சினிமா

”ஜாலியோ ஜிம்கானா.. சொன்னத செஞ்சானா” - வெளியானது பீஸ்ட் 2வது சிங்கிள் அறிவிப்பு!

பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது.

”ஜாலியோ ஜிம்கானா.. சொன்னத செஞ்சானா” - வெளியானது பீஸ்ட் 2வது சிங்கிள் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய்யின் 65வது படமாக உருவாகி வருகிறது பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில்,சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி என பலரும் நடித்துள்ளனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் கடந்த மாதம் வெளியாக பட்டித்தொட்டியெங்கும் பட்டையக்கிளப்பி பில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் பீஸ்ட்-ன் இரண்டாவது சிங்கிள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அதன்படி ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் எதிவரும் மார்ச் 19ம் தேதி வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலை நடிகர் விஜய்யே பாடியுள்ளார். கடைசியாக மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடலை விஜய் பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடலின் வரிக்கு ஏற்றார் போல் புரோமோ வீடியோவே துள்ளலான காட்சிகளுடன் கலர்ஃபுல்லாக இருப்பதால் பாடல் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதனையடுத்து #BeastSecondSingle , #JollyoGymkhana ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

banner

Related Stories

Related Stories