
தமிழ்நாட்டில் கடந்த திராவிட மாடல் ஆட்சியில் உலகமே தமிழ்நாட்டை உற்று நோக்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி, காலை உணவுத் திட்டம் வரை அனைத்தும் பல அறிஞர்களால் பாராட்டப்பட்டது. குறிப்பாக தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தை பிடித்தது. ஒன்றிய பாஜக அரசே தமிழ்நாட்டை புகழ்ந்து பாராட்டியது.
மேலும் தொழில் முதலீட்டில் தமிழ்நாடு முன்னேறியது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வீழ்ந்த பொருளாதாரத்தை, கடந்த திராவிட மாடல் ஆட்சியில் முன்னேற்றினார் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என அனைத்திலும் டாப்பில் இருந்த தமிழ்நாடு, தற்போதைய 6 மாத தவெக ஆட்சியில் சரிய தொடங்கியுள்ளது.
தவெக ஆட்சியில் தமிழ்நாடு எல்லாவற்றிலும் பின்னோக்கி செல்கிறது. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, மனதில் சுயாட்சி, பொருளாதாரம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு பின்னடைவை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு வரும் தொழில் முதலீடுகள் அனைத்தும் ஆந்திராவுக்கு செல்வதாக பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.

அண்மையில் கூட ரூ.1,614 கோடி மதிப்பிலான 3 நிறுவனங்களின் முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுள்ளது. இப்படி தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வரும் முதலீடுகள் அனைத்தும் ஆந்திராவுக்கு செல்லும் நிலையில், தவெக ஆட்சியின் கையாலாகத்தனத்தை எதிர்க்கட்சியினர், இணையவாசிகள், அறிஞர்கள் என பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
இந்த குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய் என்றும், தமிழ்நாட்டுக்கு முறையாக முதலீடுகள் வருவதாகவும் தவெக அரசு மழுப்பி முட்டுக்கொடுத்து வந்தது. மேலும் வழக்கம்போல் இதற்கும் திமுக மீது பழியை போட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், முதலீட்டாளர்களுக்கு உதவுவதற்கும் செயல்படும் முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான Guidance Tamil Nadu-ல் இருந்து Data கசிவு காரணமாக 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது Guidance TN-ல் இருந்து தொழில் முதலீட்டு பேச்சுவார்த்தைகள் மற்றும் ரகசியத் தகவல்களை அண்டை மாநிலத்துக்கு கசியவிட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், ஒப்பந்தப் பணியாளர்களாக இருந்த 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட 15 பேரில் கிறிஸ்டோ லாரல், பிரபாகரன் ஆண்டி, ப்ரீஜா பிரசாத் ஆகிய 3 பேர் ஆந்திர மாநில பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் பணியில் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த தகவல்களை அறிந்திருந்தவர்கள், பணிநீக்கம் செய்யப்பட்ட உடனேயே ஆந்திர மாநிலத்தில் பணியில் சேர்ந்தது, தகவல் கசிவு தொடர்பான சந்தேகத்தை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பணியாற்றியபோது அவர்கள் ஆந்திர அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தார்களா, தகவல்களை முன்கூட்டியே பகிர்ந்தார்களா என்பது குறித்து தற்போது எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஏற்கனவே தவெக அரசு மெத்தனப்போக்கால் பல விஷயங்களை தமிழ்நாடு இழந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஆந்திராவின் sleeper cell இருந்துள்ளது தற்போது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






