தமிழ்நாடு

அமைச்சர் வன்னி அரசு மீது கர்நாடக அரசு வழக்குப் பதிவு? அம்மாநில வனத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தடை செயப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று விலங்கினை துன்புறுத்தினார் எனவும் வன்னி அரசு மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் வன்னி அரசு மீது கர்நாடக அரசு வழக்குப் பதிவு?
அம்மாநில வனத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
S Muthukrishnan
Updated on

தமிழ்நாடு அரசின் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு, முதுமலைப் புலிகள் காப்பகத்தில் புலியை துரத்திச் சென்றும் காட்டு யானையை மிக அருகில் சென்று பார்ப்பதும் போன்ற வீடியோக்கள் வெளியிட்டார். இது சில தினங்களுக்கு முன்பு வைரலானது.

யானையை துரத்திப்பிடித்த விடியோ எடுக்கப்பட்டது கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் என செயதிகள் வெளியாகியது.

இது முழுக்க வனவிலங்குகள் சட்டத்திற்கு எதிரானது. அமைச்சர் வன்னிஅரசு மற்றும் அவருடன் சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதோடு நீலகிரி உயிர்க்கோளக் காப்பகப் பகுதியிலும் சஃபாரி வாகனத்தில் சென்று, தடை செயப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று விலங்கினை துன்புறுத்தினார் எனவும் வன்னி அரசு மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ’’ அமைச்சர் வன்னிஅரசு மற்றும் அவருடன் சென்றவர்கள் வனவிலங்கு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறியுள்ளனரா என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் காவல் துறை தலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘’எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவராக இருந்தாலும் வனப்பகுதிக்குள் அனைவரும் சட்டத்தை பின்பற்ற வேண்டும்’’ என்று எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக வனத்துறையினர், ’’பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் அமைச்சர் வன்னி அரசு கர்நாடக வனத்துறை வாகனத்தில் பயணித்து காட்டு யானையை நெருங்கிச் சென்றதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தவிட்டுள்ளார்’’ என்றனர்.

banner

Related Stories

Related Stories