தமிழ்நாடு

சென்னையில் 70 கிலோ ஹெராயின் போ*ப்பொருள் பறிமுதல் - இருவர் கைது!

சந்தை மதிப்பில் ஒரு கிலோ ஹேராயின் ரூ.5 முதல் ரூ.7 கோடி வரை விற்பனையாகிறது என்பதன் அடிப்படையில் கைப்பற்றபட்ட 70 கிலோ போ*ப் பொருளின் மதிப்பு ரூ.700 கோடியாக இருக்கலாம் என தகவல்.

சென்னையில் 70 கிலோ ஹெராயின் போ*ப்பொருள் பறிமுதல் -  இருவர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை மாதவரத்தில் பலகோடி மதிப்புள்ள 70 கிலோ ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரகசியத் தகவலின் அடிப்படையில், சென்னை மாதவரத்தில் உள்ள ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அருகே ஐஸ் ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த மொபைல் ஐஸ்கிரீம் வாகனத்தை DRI அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, வாகனத்தின் குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹெராயின் பொட்டலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாகனத்தில் இருந்த இருவரையும் கைது செய்தனர். அவர்கள் சென்னையைச் சேர்ந்த அப்துல் ஷுக்கூர் மற்றும் ஷபிக் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் தென் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

சென்னையில் 70 கிலோ ஹெராயின் போ*ப்பொருள் பறிமுதல் -  இருவர் கைது!

கைது செய்யப்பட்ட இருவரும் புதன்கிழமை இரவு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

DRI அதிகாரிகள் கூறுகையில், “அடையாளம் தெரியாத நபர்கள் இந்த போதைப்பொருள் கடத்தல் சரக்கை வேறு ஓர் இடத்துக்கு எடுத்துச் செல்ல இருவரிடமும் ஒப்படைத்துள்ளனர். இந்த ஹெராயின் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

சந்தை மதிப்பில் ஒரு கிலோ ஹேராயின் ரூ.5 முதல் ரூ.7 கோடி வரை விற்பனையாகிறது என்பதன் அடிப்படையில் கைப்பற்றபட்ட 70 கிலோ போதைப் பொருளின் மதிப்பு ரூ.700 கோடியாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories