
பாலியல் சுரண்டல் கட்சி!
தமிழக வெற்றிக் கழகத்துக்கு ‘பாலியல் சுரண்டல் கட்சி’ என்ற பெயர்தான் சரியானதாக இருக்கும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெயர் சூட்டி இருப்பது சாதாரண கிண்டல் அல்ல. அந்தக் கட்சியே முழுக்க முழுக்க அப்படித்தான் இருக்கிறது.
இந்த செய்திகளைப் பார்த்து த.வெ.க. தலைவரோ, அக்கட்சியினரோ வெட்கப்படவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.
1. கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ். ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். அவர் மீது இன்னமும் விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை.
“ஆட்சியர் புகார் கொடுத்தால் விசாரிப்போம்” என்று பேட்டி கொடுக்கிறார் ஒரு அமைச்சர். தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
2. கைத்தறித் துறை அமைச்சராக இருக்கும் விஜய் பாலாஜி, ஈரோடு மாவட்ட பெண் எஸ்.பி.யை இரவு நேரத்தில் தன்னை வந்து பார்க்க அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தபோது அவரிடம் கடுமையாகப் பேசி இருக்கிறார்.
3. ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் லீலைகள் அனைவரும் அறிந்தது. இந்த ஆட்சி வந்ததும் ஜுன் 2 ஆம் தேதியன்று நாறியது இவரது விவகாரங்கள்தான்.
விஜய் ரசிகையை வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இரண்டு த.வெ.க.வினர் பாலியல் வன்கொடுமை நடத்தினார்கள். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் பெயரைச் சொல்லி தான் இது நடந்துள்ளது.
அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவிடம் இந்தப் பெண் புகார் சொன்னார். நடவடிக்கை இல்லை. அந்தப் பெண் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். சரவணனுக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது.

4. அயனாவரத்தில் மதுபோதையில் பெண் காவலரை மூன்று த.வெ.க.வினர் ஆபாசமாகத் திட்டினார்கள். பெண் காவலருக்குப் பாதுகாப்பாக வந்த காவலரை அந்த மூன்று பேரும் தாக்கினார்கள். (செப்டம்பர் 14)
5. சென்னையில் பத்து வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கி கைதான பாம்பு தினேஷ் த.வெ.க. நிர்வாகி.
6. கட்சி பதவி தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்துள்ளார் அரக்கோணம் த.வெ.க. நிர்வாகி சசிகுமார். அந்த வீடியோவைக் காட்டி அந்தப் பெண்ணை தொடர்ந்து மிரட்டி வருகிறார்.
அது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் பதிவு செய்ய மறுத்துவிட்டதால் டி.ஜி.பி. அலுவலகத்துக்கே அந்தப் பெண் வந்து கதறினார்.
7. நாகர்கோவிலில் மழையில் நின்ற மாணவிக்கு லிப்ட் தருகிறேன் என்று சொல்லி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள கிறிஸ்டோபர் த.வெ.க. நிர்வாகி.
8. ஆரணி த.வெ.க. வடக்கு மாவட்ட செயலாளர் சத்யா. கட்சி சார்பாக வரும் பெண் நிர்வாகிகள் அனைவரிடமும் பாலியல் அத்துமீறல்களை தொடர்ந்து செய்து வந்துள்ளார் சத்யா.
எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். பெண் நிர்வாகிகள் சிலரிடம் சொத்தை வாங்கிக் கொண்டு தர மறுத்துள்ளார். ஒரு பெண் நிர்வாகி தற்கொலை செய்யும் அளவுக்குப் போய்விட்டார்.
இவை அனைத்தையும் அமைச்சர் புஸ்சி ஆனந்திடம் புகாராக கொடுத்துள்ளார்கள். எந்த நடவடிக்கையும் இல்லை. பொறுமை இழந்த த.வெ.க. மகளிர் அணியினர் த.வெ.க. மாவட்ட அலுவகத்தையே இழுத்துப் பூட்டி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அங்கு இருந்த சத்யாவின் படத்துக்கு கருப்பு மை பூசினார்கள்.
9. காரமடை ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி தமக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,
அதைத் தட்டிக்கேட்டதால் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அக்கட்சியின் முன்னாள் பெண் ஊராட்சிச் செயலாளர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக கருப்பசாமி உட்பட மூன்று பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
10. சேலம் மாவட்ட த.வெ.க. பிரமுகர் மணிகண்டன், ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
11. வேம்புலி (ஆலந்தூர் வடக்குப் பகுதி த.வெ.க. செயலாளர்) - மகளிர் உடற்பயிற்சி மையப் பொறுப்பாளருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கினார்.
12. விஜய் மோகன் (ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர்) – கட்சியில் இணைத்துக் கொள்வதாகக் கூறி ஒரு பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்த புகாருக்கு ஆளானார்.
– இவை போல இன்னும் 10க்கும் மேற்பட்ட பாலியல் புகார்கள் வந்துள்ளன. இவை அனைத்தும் ஆறு மாதத்தில் நடந்தவை.
கட்சியில் பெண் நிர்வாகிகளை முக்கியப் பிரமுகர் ஒருவர் வேட்டையாடப்படுவது தொடர்பாக ஆடியோ உரையாடல்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.
‘விசாரணை நடத்தக் கூடியவரைத் தான் விசாரிக்க வேண்டும்’ என்று பதிவுகள் வந்தவண்ணம் உள்ளன.
ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து தனி நீதிமன்றங்கள் அமைப்பது போல, இந்த த.வெ.க.வினர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
ஏதோ கட்சியை விட்டு நீக்கினால் பெரிய தண்டனையைப் போல நினைத்துக் கொள்கிறார் விஜய். சரியாக, முறையாக வழக்கை நடத்தி குற்றவியல் சட்டத்தின் படி தண்டனைகள் தரப்பட வேண்டிய கிரிமினல் குற்றங்கள் இவை.






