தமிழ்நாடு

உஷார்.. தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள்.. உள்ளே நுழைந்த கட்டுவிரியன் பாம்பு.. கள்ளக்குறிச்சியில் சோகம்!

கட்டுவிரியன் பாம்பு கடித்தத்தில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உஷார்.. தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள்.. உள்ளே நுழைந்த கட்டுவிரியன் பாம்பு.. கள்ளக்குறிச்சியில் சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் ஏரிக்கரையோரம் சந்திரன் - புஷ்பா தம்பதியினர், தேவதர்ஷினி (3) மற்றும் தேவஜனனி (1) ஆகிய இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த சூழலில் நேற்றைய முன்தினம் (நவ.17) இரவு அன்று அனைவரும் உறங்கி கொண்டிருந்த சமயத்தில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது.

இதனை யாரும் கவனிக்காத நிலையில், அந்த பாம்பு புஷ்பா மற்றும் 2 குழந்தைகளை கடித்துள்ளது. பாம்பு கடித்ததை உணர்ந்த புஷ்பா உடனே விழிக்க, அலறியடித்து அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு அளித்த தகவலின்பேரில், பாதிக்கப்பட்ட 2 குழந்தைகள் உள்பட 3 பேரும் அருகில் உள்ள புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

உஷார்.. தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள்.. உள்ளே நுழைந்த கட்டுவிரியன் பாம்பு.. கள்ளக்குறிச்சியில் சோகம்!

அங்கே அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பாம்பின் விஷம் குழந்தைகளின் உடல் முழுவதும் பரவி 2 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு தாய் புஷ்பாவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு அளித்த தகவலின்பேரில், போலீசார் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தைகளின் உடலில் பாம்பு கடித்ததற்கான தடயங்கள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தநர். இதனால் போலீசார் சந்தேகமடைந்ததை தொடர்ந்து உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து உடற்கூறாய்வு முடிவுகளில் இரண்டு பேரும் பாம்பு கடித்து உயிரிழந்தனர் என்பது உறுதியானது. கட்டுவிரியன் பாம்பு கடித்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories