சினிமா

’அரபிக் குத்து’ பாடல் பற்றி விஜய் என்ன சொன்னார் தெரியுமா? மனம் திறந்த சிவகார்த்திகேயன்!

’அரபிக் குத்து’ பாடல் பற்றி விஜய் என்ன சொன்னார் தெரியுமா? மனம் திறந்த சிவகார்த்திகேயன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாவதற்காக தயாராகி வருகிறது விஜய்யின் பீஸ்ட் படம்.

பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு என பலரும் நடித்திருக்கும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அண்மையில் வெளியான பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக பட்டையக்கிளப்பி வருகிறது.

’அரபிக் குத்து’ பாடல் பற்றி விஜய் என்ன சொன்னார் தெரியுமா? மனம் திறந்த சிவகார்த்திகேயன்!

இப்படி இருக்கையில் அரபிக் குத்து பாடல் குறித்து நடிகர் விஜய் பேசியிருப்பது தொடர்பாக சமீபத்தில் நடந்த தனியார் யூடியூப் சேனலின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

அதில், அரபிக் குத்து பாடல் படபிடிப்பு எப்போதோ படமாக்கப்பட்டுவிட்டது. அப்போது விஜய் சார் என்ன கூறினார் என எனக்கு தெரியாது. ஆனால் பாடல் வெளியீட்டுக்கான புரோமோ ஷூட்டிங்கின் போதுதான் விஜய் சார் அரபிக் குத்து பாடல் பற்றி பேசினார்.

அப்போது, தொலைபேசியில் பேசிய அவர் “சூப்பர் பா. பாட்டு எழுதி கொடுத்ததற்கு ரொம்ப தேங்க்ஸ். அரபிக்லாம் பயங்கரமா எழுதுறியே” என்றார். அப்போது, உங்களுக்கு தெரியாததா சார். அனிருத் பாதி பாடிருவாரு. நாம் விட்ட இடத்தை சும்மா நிரப்பியிருக்கேன் என தான் கூறியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

மேலும் நடிகர் விஜய்க்கு அரபிக் குத்து பாடல் மிகவும் பிடித்திருக்கிறதாம். ஏனெனில் முதல் முறை கேட்டபோதே பாடல் ஹிட் ஆகும் என அனிருத்திடம் அவர் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

banner

Related Stories

Related Stories