சினிமா

’மாஸ்டர்’ விஜய் குட்டிக்கதை கேட்கச் சென்ற ரசிகர்களை வெளியேற்றிய ஹோட்டல் நிர்வாகம்: வருத்தத்தில் ரசிகர்கள்

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளதையொட்டி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

’மாஸ்டர்’ விஜய் குட்டிக்கதை கேட்கச் சென்ற ரசிகர்களை வெளியேற்றிய ஹோட்டல் நிர்வாகம்: வருத்தத்தில் ரசிகர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் முதல் முறையாக உருவாகி வரும் படம் ’மாஸ்டர்’. படத்தின் பூஜை முதல் ஷூட்டிங் முடிந்தது வரை தொடர்ந்து பலவித அப்டேட்டுகளை கொடுத்து வந்த படக்குழு தற்போது இசை வெளியீட்டு விழாவை கொண்டாடி வருகிறது.

#குட்டி_ஸ்டோரி, #வாத்தி_கம்மிங், #வாத்தி_ரெய்டு என மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடல்கள் மில்லியன் கணக்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது படத்தின் மொத்த பாடல்களும் இன்று வெளியாகவுள்ளதால் உற்சாகத்தில் தத்தளித்து வரும் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #MasterAudioLaunch ஹேஷ்டேக்குகள் மூலம் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

’மாஸ்டர்’ விஜய் குட்டிக்கதை கேட்கச் சென்ற ரசிகர்களை வெளியேற்றிய ஹோட்டல் நிர்வாகம்: வருத்தத்தில் ரசிகர்கள்

முன்னதாக வெளியான படத்தின் பாடல்களின் பட்டியல் வெளியானதோடு, இளைஞர்களின் இசை நாயகனாக இருக்கும் யுவன் சங்கர் ராஜாவும் மாஸ்டர் படத்தில் பாடியுள்ளார் என்பதை அறிந்து கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடக்கும் மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு மாஸ்டர் படக்குழுவினர் மட்டுமல்லாது பல்வேறு திரைப்பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். இதனை அங்குள்ள ரசிகர்கள் வீடியோ, புகைப்படங்கள் எடுத்து நேரலை ஒளிபரப்புக்கு முன்பே ட்விட்டரில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், இசை வெளியீட்டு மேடையை காவல் நிலையம் போன்று அலங்கரித்துள்ளனர் படக்குழுவினர். விழாவுக்கு வருகைத் தந்த நடிகர் விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் கைக்கூப்பி வணக்கம் தெரிவித்த வீடியோவும் இணையத்தை கலக்கி வருகிறது. மேலும், நடிகை சிம்ரன் மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், விழா மேடையில் விஜய் என்ன குட்டிக் கதை சொல்லப் போகிறார் என்ற ஆவலும் எழுந்துள்ளது. படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ள சன் டிவி நிறுவனமே இந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒளிபரப்பு உரிமையை வாங்கியதோடு இன்று மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பாகி உள்ளது.

இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதிச்சீட்டு இல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் காத்திருந்த ரசிகர்கள் ஹோட்டலில் நுழைவு வாயிலில் நின்றிருந்த பாதுகாப்புப் பணியாளர்களைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.

தற்போது உள்ளே நுழைந்த ரசிகர்களை வெளியேற்றும் பணி நடந்துவருகிறது. மேலும் வெளியில் நின்றிருந்த ரசிகர்கள் ஹோட்டல் நிர்வாகத்துடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ‘பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ’மாஸ்டர்’ ஆடியோ வெளியீட்டு விழாவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories