சினிமா

நயன்தாரா இயக்குநருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன் : பட டைட்டிலை அறிவித்தது பிரபல தயாரிப்பு நிறுவனம்!

'கோலமாவு கோகிலா' பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா இயக்குநருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன் : பட டைட்டிலை அறிவித்தது பிரபல தயாரிப்பு நிறுவனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து முடித்திருக்கும் படம் ‘ஹீரோ’. விரைவில் ரிலீஸாகவிருக்கும் படத்தின் பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘ஹீரோ’ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் தயாரிக்க முடிவெடுத்துள்ளது. சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸுடன் இணைந்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்துக்கு ‘டாக்டர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் ‘டாக்டர்’ படத்தை இயக்குகிறார். மேலும், ‘ரெமோ’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் அனிருத் இசையமைக்கிறார்.

டிசம்பர் 6ம் தேதி முதல் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட ஷூட்டிங் தொடங்கும் என வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ். அநேகமாக கோடை விடுமுறைக்கு இந்தப் படம் ரிலீஸாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே கோடை விடுமுறை ரிலீஸுக்காக விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையில் இருக்கும் போது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படமும் ரிலீஸானால் கோலிவுட்டில் கடுமையான போட்டி நிலவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

banner

Related Stories

Related Stories