சினிமா

செம்ம காம்போவில் சிவகார்த்திகேயன் நெக்ஸ்ட்! #SK16

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிக, நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

sivakarthikeyan
google sivakarthikeyan
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வரும் மே -17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்பொழுது மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படத்திலும் நடித்துவருகிறார்.

அனு இம்மானுவேல் 
அனு இம்மானுவேல் 

இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் குழுவினர் குறித்த தகவலை வெளியிட்டு வருகிறது தயாரிப்பு தரப்பு.

ஐஸ்வர்யா ராஜேஷ் 
ஐஸ்வர்யா ராஜேஷ் 

சிவகார்த்திகேயனின் 16வது படமான இதில், அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கவிருக்கும் இப்படத்துக்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். தவிர, ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரிலும், காமெடி டிராக்கில் யோகிபாபு மற்றும் சூரி நடிக்க இருக்கிறார்கள்.

யோகிபாபு & சூரி 
யோகிபாபு & சூரி 

சிவகார்த்திகேயனை நடிகராக மெரினா படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ் தான். ஏழு வருடங்கள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories