
தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. குற்றங்களைத் தடுக்க வேண்டிய முதலமைச்சர் விஜயோ வாய்மூடி மௌனமாக இருக்கிறார். கொலைகளே நடக்காத நாள் இல்லை என்ற அளவுக்குத் தினமும் கொலைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இன்றுகூடச் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த கொடூரச் சம்பவத்திற்குத் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில்” சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் அஜித் என்ற இளைஞர், வீட்டு வாசலில் பெற்றோரின் கண்முன்பே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களின் விலையும், கொலையும்தான் அன்றாடம் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டிருக்கின்றன.
முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சிக்க Script-ஐ மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையை தன்வசமுள்ள காவல்துறையைச் செயல்படுத்துவதில் கொஞ்சம் காட்டியிருந்தால் கூட இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்திருக்கலாம். இனியாவது செய்வாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.






