தமிழ்நாடு

8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி.. சரண்டர் ஆன சில மணி நேரத்திலேயே தப்பியோடிய அவலம்.. திணறும் போலீஸ்!

பல நாட்களாக தலைமறைவாக இருந்த மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணன் என்கின்ற குற்றவாளி கலசப்பாக்கம் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி.. சரண்டர் ஆன சில மணி நேரத்திலேயே தப்பியோடிய அவலம்.. திணறும் போலீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு கண்ணன் என்பவர் மீது மணல் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த குற்றவாளி தலைமறைவாக இருந்து வந்த நிலையில், நேற்று (நவ.16) தனது வழக்கறிஞருடன் கலசப்பாக்கம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

அப்போது கலசபாக்கம் நீதிமன்ற நடுவர் உதயகுமார், குற்றவாளி கண்ணனை நீதிமன்ற வளாகத்திலேயே காத்திருக்கும் படி கூறியதாக சொல்லப்படுகிறது.

அவ்வாறு நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த குற்றவாளி கண்ணன், சிறுநீர் கழித்து விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். வழக்கறிஞரும் அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், அவர் தப்பியோடியது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி.. சரண்டர் ஆன சில மணி நேரத்திலேயே தப்பியோடிய அவலம்.. திணறும் போலீஸ்!

மேலும் தப்பி ஓடிய குற்றவாளி கண்ணனை தடுக்க முயன்ற 2 பெண் காவலர்களை தள்ளிவிட்டு ஓடியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் இருந்து குற்றவாளி தப்பியோடி 24 மணி நேரம் ஆகியும், இதுவரை காவல் துறையினர் கண்ணனை கண்டுபிடித்து கைது செய்யாதது அந்த பகுதி மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே தமிழ்நாடு சீர்கெட்டு போனதோடு, குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வரும் நிலையில், சிறையில் இருந்தும், காவல் நிலையத்தில் இருந்தும், நீதிமன்ற வளாகத்தில் இருந்தும் குற்றவாளிகள் தப்பியோடும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இந்த அரசின் அலட்சியப்போக்கிற்கும், டம்மி முதல்வராக விஜய் செயல்படுவதாகவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்தும், கண்டனங்களை எழுப்பியும் வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories