தமிழ்நாடு

மதுபானங்களையும் உயிர் காக்கும் மருந்துகள் பட்டியலில் இணைத்து விட்டார்களோ? : மா.சுப்பிரமணியன் ஆவேசம்!

மக்களின் உயிரைக் காக்க உருவாக்கப்பட்ட மருத்துவச் சேவைக் கழகத்தின் முன்னுரிமை இதுதானா? அரசு இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறது?

மதுபானங்களையும் உயிர் காக்கும் மருந்துகள் பட்டியலில் இணைத்து விட்டார்களோ? : மா.சுப்பிரமணியன் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசு மருத்துவமனைகளுக்குத் தரமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தடையின்றி வாங்கி வழங்குவதற்காக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) என்ற பொதுத்துறை நிறுவனம் உருவாக்கப்பட்டது.

ஆனால் தற்போது த.வெ.க அரசு, இந்த நிறுவனத்தின் உண்ணதத்தை சிதைத்துள்ளது. மருத்துகளை கொள்முதல் செய்வதற்கு பதில் மதுபானக் கிடங்குகளைப் பழுதுபார்க்கும் பணிகளுக்காக ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.

தி.மு.க முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை கொள்முதல் செய்தல், தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்தல், மாவட்டக் கிடங்குகளில் மருந்துகளைச் சேமித்தல், அரசு மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விநியோகம் செய்தல், அறுவை சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்குதல் மற்றும் CT Scan, MRI உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனை வசதிகளை நிர்வகித்தல் போன்றவைகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (TNMSC) முக்கியப் பணிகள் ஆகும்.

ஆனால் த.வெ.க ஆட்சியில் டாஸ்மாக் கிடங்குகளை சீரமைக்கவும் TNMSC ஐ பயன்படுத்த தொடங்க உள்ளதை பார்த்தால் இந்த ஆட்சியில் மதுபானங்களையும் உயிர் காக்கும் மருந்துகள் பட்டியலில் இணைத்து விட்டார்களோ என்று எண்ணதோன்றுகிறது" என விமர்சித்துள்ளார்.

அதேபோல் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, ”மக்களுக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் கொள்முதல் செய்து பராமரிக்க வேண்டிய மருத்துவச் சேவைக் கழகம், இப்போது மதுபானக் கிடங்குகளின் மேற்கூரை, டைல்ஸ், கட்டமைப்புகளைப் பராமரிக்கக் களமிறங்கியிருக்கிறது!

மதுவால் ஏற்படும் பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய சுகாதாரத் துறை, மதுபானக் கிடங்குகளைப் பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன? மருத்துவமனைகளில் மருந்து இல்லாவிட்டாலும் பரவாயில்லை... மதுபானக் கிடங்கில் டைல்ஸ் மட்டும் பளபளக்க வேண்டுமா?

மக்களின் உயிரைக் காக்க உருவாக்கப்பட்ட மருத்துவச் சேவைக் கழகத்தின் முன்னுரிமை இதுதானா? அரசு இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறது?" என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

banner

Related Stories

Related Stories