தமிழ்நாடு

“பா.ஜ.க பாதையில் செல்லும் த.வெ.க. அரசு ; தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்க அனுமதியோம்” : கி.வீரமணி ஆவேசம்!

அபிநய நாட்டியாஞ்சலி என்னும் குழுவினருடன் இணைந்து சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்குப் பெயர் ‘ராம் யாத்ரா’வாம்!

“பா.ஜ.க பாதையில் செல்லும் த.வெ.க. அரசு ; தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்க அனுமதியோம்” : கி.வீரமணி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனுஷ்கோடியில் அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் ‘ராம யாத்திரை’யா? குழந்தைகளுக்குக் காவி உடையா தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்க அனுமதியோம் என த.வெ.க அரசை கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அரிச்சல் முனையில் கடந்த 27.09.2026 அன்று சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நடத்தி, உலக சுற்றுலா நாள் கொண்டாடப்பட்டுள்ளது. அதில், அபிநய நாட்டியாஞ்சலி என்னும் குழுவினருடன் இணைந்து சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்குப் பெயர் ‘ராம் யாத்ரா’வாம்!

ராம் யாத்ரா நடத்த வேண்டிய அவசியம் என்ன?

நூற்றுக்கணக்கான குழந்தைகள், கொளுத்தும் வெய்யிலில் போதுமான ஏற்பாடுகளின்றி அவதிப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்துக் குழந்தைகளுக்கும் காவி உடை அணிவித்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறைக்குக் காவி உடை அணிந்து ராம் யாத்ரா நடத்த வேண்டிய அவசியம் என்ன? மதவெறியைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ்.சும், இந்து முன்னணி வகையறாக்களும் ராமேஸ்வரத்தைத் தொடர்ந்து மதவெறித் தளமாகப் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். அதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசும் வழிவகுக்க முயற்சிக்கிறது. இப்போது அந்தப் பாதையில் த.வெ.க. அரசு செல்கிறதா?

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில். ராமநாதபுரம் என்பதை ‘ராமன்நாடு’ என்று ஆங்கிலத்தில் எழுத முயன்று, கடும் எதிர்ப்புகளை எழுப்பி, அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதே ராமன் கதையைச் சொல்லித் தான், தமிழ்நாட்டின் பொருளாதார நலனுக்குப் பெரிதும் பயன்பட்டிருக்க வேண்டிய சேதுக் கால்வாய்த் திட்டம், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்டது.

“பா.ஜ.க பாதையில் செல்லும் த.வெ.க. அரசு ; தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்க அனுமதியோம்” : கி.வீரமணி ஆவேசம்!

குழந்தைகளைக் காவி உடையுடன் நிறுத்திய அதிகாரிகள் யார்?

பிஞ்சுக் குழந்தைகளைக் காவி உடையுடன் நிறுத்திய அதிகாரிகள் யார்? இதற்கு அனுமதி அளித்த சுற்றுலாத் துறை அதிகாரிகள் யார்? மாவட்ட ஆட்சியர் இதில் மிகுந்த அக்கறை காட்டினார் என்று சொல்லப்படுகிறதே, என்ன பின்னணி?

தமிழ்நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்து, மதவெறிக் காடாக்க நினைக்கும் பா.ஜ.க.வுக்கு ஒத்துழைப்போர் யாராயினும், அவர்களைத் தமிழ்நாட்டு மக்களும் ஏற்கமாட்டார்கள் – வரலாறும் மன்னிக்காது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories