தமிழ்நாடு

”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

அரசியல் கத்துக்குட்டிகளுக்கு இந்த தேர்தலில் பதிலடி கிடைக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பவள விழா கண்ட பேரியக்கமான தி.மு.க, இந்தத் தேர்தலில் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும் என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:-

அதிகார ஆசையோடும் மமதையோடும் எதை வேண்டுமானாலும், எதைக் கொடுத்தும் வாங்கிவிடலாம் எனச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், இது 'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்'; இங்கு அனைவரையும் மதிக்க வேண்டும். இவர்களுக்கெல்லாம் தக்க பாடம் வில்லிவாக்கத்தில் புகட்டப்படும்.

ஒரு காலத்தில் 'லீடர்... லீடர்...' எனக் கைகட்டிக்கொண்டு நின்றவர், இன்று எங்களுக்கு 'அறிவுப் பரிசோதனை' செய்ய வேண்டும் என்கிறார். முதலில் இவருக்குத்தான் கீழ்ப்பாக்கம் மனநல மையத்தில் பரிசோதனை செய்ய வேண்டும்!

பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவரை விமர்சிப்பவர்களை, தன் தாயே தடுத்தாலும் தி.மு.க. தொண்டன் எதிர்ப்பான். பவள விழா காணும் பேரியக்கமான தி.மு.க., இந்தப் 'பால்வாடி' இயக்கத்திற்குப் பாடம் புகட்டும்.

நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை. எங்களுடைய கொள்கை, கோட்பாடுகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் மக்களோடான தொடர்புகளை மட்டுமே நம்பியுள்ளோம். பேய், பிசாசுகளைப் பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம்!

மக்கள் சக்தி யார் பின்னால் இருக்கிறது என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டும். அவர்கள் கூவிக் கூவி அழைத்தாலும், கூட்டணிக்கு யாரும் வரவில்லை. அரசியல் ஞானம் மிக்கவர் தி.மு.க. தலைவர்.

அரசியல் நாகரிகத்தோடு செல்பவர்களுக்கு நாங்கள் எதுவும் தெரிவிப்பதில்லை. ஆனால், நாகரிகம் தெரியாதவர்களுக்குப் பதில் சொல்லவில்லை என்றால், அது 'பயம்' என்பார்கள். இந்த அரசியல் கத்துக்குட்டிகளுக்கு ஏதாவதொரு வகையில் பதிலடி கொடுத்தே தீர வேண்டும்.

தி.மு.க. கூட்டணி என்பது உறுதியான, வலுவான கூட்டணி. சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளைக் கடந்த முறையைவிட கூடுதல் வாக்குச் சதவீதத்தோடு மீண்டும் கைப்பற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories