
முதலமைச்சர் விஜய் அக்டோபர் 2 அன்று தொடங்கி வைக்கப்பட்ட வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ், சாதாரண நகரப் பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள், சிறுமியர் மற்றும் திருநங்கையர் கட்டணமின்றிப் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விரிவுபடுத்தப்பட்ட இலவசப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும், அவர்களுக்கு உதவியாக வரும் ஒரு துணையாளரையும் இணைப்பதற்கான அரசாணை இதுவரை த.வெ.க வெளியிடப்படவில்லை.
இதனை கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து திட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், எங்களை ஏன் மறுதலிக்கிறீர்கள் ? இதற்கு பெயர் பாகுபாடு என தி.மு.க. மாற்றுத்திறனாளிகள் அணி மாநிலச் செயலாளர் தீபக்நாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாளெல்லாம் பொழுதெல்லாம் இந்த மாற்றுத்திறனாளிகள் சமூகம் ரோட்டிற்கு வந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டும் அதுதானே ! பொதுவழி சமூகத்துக்கு ஒரு சிறப்பு சலுகை தருகிறீர்கள் சரி ஏற்கிறோம்....அப்படியான சலுகைகள் தருகின்ற பொழுதுதான் விளிம்பு நிலை சமூகமாக இருக்கக்கூடிய பெண்களுக்கான வாழ்க்கையில் ஏற்றம் உருவாகும். சமூகத்தில் அவர்களுடைய பங்களிப்பு அதிகமாகும். பொருளாதார வளர்ச்சியில் அவர்களுடைய பங்கு நிச்சயம் அவசியம் அதற்கான ஏற்பாடாக இதைச் செய்கிறீர்கள் மகிழ்ச்சி .....!
திருநங்கை தோழர்களுக்கும் இதை சேர்த்து செய்தீர்கள் பெரிய மகிழ்ச்சி , அதே வேளையில் மாற்றுத்திறனாளிகளை ஏன் உள்ளடக்க மறுக்கிறீர்கள்? எங்களை ஏன் மறந்து போகிறீர்கள், எங்களை ஏன் மறுதலிக்கிறீர்கள் ? இது எதன் வெளிப்பாடு? தனித்துவபடுத்துதல்(Distinction), வெளியேற்றுதல்( exclusion) நிராகரித்தல் Rejection)இதற்கு பெயர் பாகுபாடு (Discrimination) எங்களை மறந்து போன ஆட்சி மிக விரைவில் வீட்டிற்கு அனுப்பபடும்” என தெரிவித்துள்ளார்.






