அரசியல்

“தமிழ்நாட்டில் பள்ளிகள் சாதிவெறிக் களமாவதைத் தடுக்க வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

“பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதோடு, கோவை மாணவனை தற்கொலைக்குத் தூண்டிய உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அறிவுறுத்தல்!

“தமிழ்நாட்டில் பள்ளிகள் சாதிவெறிக் களமாவதைத் தடுக்க வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் சாதிய வல்லாதிக்கத்தைத் தடுக்கும் சமூகநீதியை விதைக்கும் விழிப்புணர்வு இன்றளவும் மக்களுக்கு தேவைப்படுகிறது என்பதை த.வெ.க ஆட்சியில் அரங்கேறிவரும் சாதிய வன்கொடுமைகள் வெளிப்படுத்துகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் பள்ளி மாணவர் ஒருவர், சாதிய பாகுபாட்டிற்குள்ளாகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டப் பதிவு பின்வருமாறு,

“தமிழ்நாட்டில் பள்ளிகள் சாதிவெறிக் களமாவதைத் தடுக்க வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

“கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

அந்தப்பள்ளியில் மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், சாதி ரீதியாக பாகுபாட்டை எதிர்கொண்டு இருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் மாணவனின் பெற்றோர்கள் உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ள காவல்துறை, இதுவரை மாணவனின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்யவில்லை.

பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்துவதோடு, இந்த சம்பவத்தில் மாணவனை தற்கொலைக்குத் தூண்டிய உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.”

banner

Related Stories

Related Stories