
ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசியா பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு (2026) ஆசியா பாரா விளையாட்டுப் போட்டிகள், ஜப்பானின் ஐச்சி-நாகோயா (Aichi-Nagoya) நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா மற்றும் நடத்தும் நாடான ஜப்பான் உட்பட மொத்தம் 45 நாடுகள் பங்கேற்றுள்ளன. மேலும் இப்போட்டித் தொடரில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் 18 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

கடந்த அக்.18-ம் தேதி தொடங்கிய இந்த போட்டித்தொடர், நாளையொடு (அக்.24) நிறைவு பெறவுள்ளது. இந்த சூழலில் இன்று (அக்.23) நடைபெற்ற போட்டித்தொடரில் தமிழ்நாட்டு பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
அதாவது மகளிர் ஒற்றையர் SU5 பிரிவின் இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்குடன் போட்டியிட்ட துளசிமதி முருகேசன், 18-21 என்ற நேர் செட்களில் 11-21 பெற்று தோல்வியுற்ற நிலையில், வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவிலும் (Mixed Doubles SL3-SU5) போட்டியில் இந்தியா சார்பில் துளசிமதி முருகேசன் மற்றும் நிதேஷ் குமார் ஆகியோர், இந்தோனேசியாவின் லீனி ரத்ரி ஒக்டிலா மற்றும் ஹிக்மத் ரம்தானிஆகியோரை எதிரிகொண்டனர். இந்த இறுதிப்போட்டியில் இணை 21-11, 21-19, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்ற நிலையில், துளசிமதி மற்றும் நிதேஷ் குமார் இணை கடுமையாகப் போராடி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இப்போட்டியில் துளமதி முருகேசன் மற்றும் மானசி ஜோஷி ஆகியோர் சீனாவின் யாங் கியூக்ஸியா மற்றும் சியாவ் ஜுக்ஸியான் இணையை 21-16, 21-13 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றனர். தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள துளமதிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒரே நாளில் 1 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில், 28 தங்கம், 34 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தமா 108 பதக்கங்களை வென்று நேற்று வரை 5-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 4-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






