தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்!

அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க-வில் இணைந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில், அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்தார். அப்போது அவருடன் சேர்ந்து, ரவீந்திரநாத்,அய்யப்பன் எம்.எல்.ஏ உள்ளிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலரும் தி.மு.க-வில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "அண்ணா தொடங்கிய, கலைஞர் கட்டிக்காத்த திராவிட முன்னேற்ற கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மனமகிழ்ச்சியுடன் இன்று இணைந்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகாலம் மக்கள் நலன்கருதி அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்த ஆட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி.

சட்டமன்ற வரலாற்றில் பேரறிஞர் அண்ணா எப்படி அனைத்துக் கட்சிகளையும் அரவணைப்போடு நடத்தினாரோ, அதுபோலத் தாயுள்ளத்தோடு அனைத்து உறுப்பினர்களுக்கும் சமபங்கு பேச்சுரிமையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மகத்தான வெற்றியைப் பெற்று, மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பார். தி.மு.க-வில் நான் ஒரு தொண்டனாகத்தான் இணைந்து இருக்கிறேன். கழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன்.

முழு ஈடுபாட்டோடு இன்றைக்கு நான் தி.மு.க-வில் இணைந்துள்ளேன். என்னைப் பாசத்தோடு அரவணைத்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.

அரசியலில் இன்றைக்குச் சர்வாதிகார ஆணவத்தோடு நடந்துகொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, இனி அரசியலில் வெற்றி பெறமாட்டார். எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பூஜ்ஜியமாகத்தான் இருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தி.மு.கவில் இணைந்த நிலையில் ஓ.பன்னீர்செலவம் இன்று கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories