தமிழ்நாடு

“தமிழ்நாடு இருக்கும் வரை மேகதாது அணையை கட்ட முடியாது” : பி.ஆர்.பாண்டியன் பேட்டி!

“தமிழ்நாடு இருக்கும் வரை மேகதாது அணையை கட்ட முடியாது” என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாடு இருக்கும் வரை மேகதாது அணையை கட்ட முடியாது” : பி.ஆர்.பாண்டியன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் காரைக்கால் விவசாயிகள் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், காவிரியின் குறுக்கே கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து நிறுத்தி தமிழகத்தில் ராசி மணல் அணை கட்டுமானம் தொடங்கிடவும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்திடவும், ஒத்த கருத்தை உருவாக்க தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

புதுச்சேரி முதல்வரை சந்தித்த பின், செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன்,

“கர்நாடக அரசு ஒப்பந்தப்படி தமிழ்நாடு - புதுச்சேரிக்கு தர வேண்டிய காவிரி நீரை தருவதில்லை. இதுவரை உபரி நீரை தான் அவர்கள் தந்து கொண்டிருக்கிறார்கள். அந்த உபரி நீரையும் தடுத்து நிறுத்தும் வகையில் மேகதாது அணையை கட்டும் நடவடிக்கையில் கர்நாடகா அரசு ஈடுபட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாட்டிற்கு இதனால் அதிக பயன் என்று திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மையைச் சொல்லப் போனால் கர்நாடகாவிடம் இருந்து வரும் உபரி நீரையும் தடுத்து நிறுத்தும், வகையில் திட்டமிட்டு இதை செய்து வருகிறார்கள்.

மேகதாட்டு அணை என்பது சட்டவிரோதமானது. கீழ்நிலை நீர்பாசன மாநிலங்களுக்கு எதிரானது. இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் ராசி மணல் பகுதியில் புதிய அணையை கட்ட வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இது நமக்கான உரிமை. ஆனால், அதே நேரத்தில் மேகதாது அணை என்பது புலிகள் சரணாலயம் அமைந்திருக்கிற பகுதியில் அமையும்.

“தமிழ்நாடு இருக்கும் வரை மேகதாது அணையை கட்ட முடியாது” : பி.ஆர்.பாண்டியன் பேட்டி!

இதனால் அப்பகுதியில் வனவிலங்குகளும், மலைவாழ் கிராம மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வீணாக தண்ணீரை கடலில் தமிழ்நாடு கலக்க விடுவதாக கர்நாடக அரசு திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

எனவே, மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடும், தமிழ்நாட்டில் ராசி மணல் அணை கட்ட வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசின் முயற்சிகளை முறியடித்திட புதுச்சேரி தமிழகம் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருக்கும் வரையில் மேகதாட்டு அணையை கட்ட விடமாட்டோம். ராசி மணல் கட்டுவதன் அவசியத்தையும் மேகதாட்டு அணை கட்டுமானத்தை நிறுத்துவதன் நோக்கம் குறித்து முதல்வரிடம் தெரிவித்தோம் அவரும் இது குறித்து முழுமையாக அறிந்துள்ளதாக தெரிவித்தார்.

நாளை தமிழ்நாட்டின் நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து இது குறித்து பேச இருக்கிறோம். இந்த விவகாரத்தில் ஒத்த கருத்தை வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

ஏற்கனவே புதுச்சேரியில் அனைத்துக் கட்சிகளும் மேகதாது அணை கட்டுமானத்திற்கு எதிர்ப்பாகவும் ராசி மணல் அணை கட்டுமான பணி உடனே துவங்கிடமும் ஆதரவாக உள்ளனர் என்றார்.

banner

Related Stories

Related Stories