உலகம்

அமெரிக்க சென்ட் தேர்தல்.. மண்ணைக் கவ்விய ட்ரம்ப் கட்சி.. சிக்கும் முக்கிய Corporate நிறுவனங்கள்?

அமெரிக்க சென்ட் தேர்தலில் ட்ரம்ப் கட்சி படுதோல்வியடைந்துள்ளது.

அமெரிக்க சென்ட் தேர்தல்.. மண்ணைக் கவ்விய ட்ரம்ப் கட்சி.. சிக்கும் முக்கிய Corporate நிறுவனங்கள்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இதற்கான வாக்குப்பதிவு நேற்று (நவ.03) நடைபெற்றது. 435 மக்களவை இடங்களுக்கும், 100 செனட் இடங்களில் 35 இடங்களுக்கும், 36 மாகாணங்களுக்கான ஆளுநர்களையும் தேர்ந்தெடுக்கவும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஜனநாயகக் கட்சி (Democratic Party) முன்னிலையில் இருந்தது. மக்களவையில் 435 இடங்களில் ஜனநாயகக் கட்சி 224 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி (Republican Party) 133 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதே போல் நாடாளுமன்றத்தின் சட்டமேலவை எனப்படும் செனட் சபையில் 53 இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி வசம் இப்போது 42 இடங்கள் மட்டுமே உள்ளன. அதுமட்டுமின்றி ஆளுநர் தேர்தலிலும் 36 மாகாணங்களில் 25-ல் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 19 இடங்களை மட்டுமே ட்ரம்ப் கட்சி தக்கவைத்துள்ளது.

அமெரிக்க சென்ட் தேர்தல்.. மண்ணைக் கவ்விய ட்ரம்ப் கட்சி.. சிக்கும் முக்கிய Corporate நிறுவனங்கள்?

ஏற்கனவே ட்ரம்ப் மீது உலக நாடுகளை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, அமெரிக்க மக்களும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், இந்த இடைக்காலத் தேர்தல் முடிவுகள் ஆட்சியின் மீதமுள்ள காலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் குடியரசு கட்சியும், பைடனின் ஜனநாயக கட்சியும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், குடியரசு கட்சி வெற்றி பெற்று ட்ரம்ப் அதிபராகியுள்ளார். டிரம்ப் அதிபர் ஆனதில் இருந்தே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் மத்தியிலும் தனது கருத்தை திணித்து வருகிறார்.

மேலும் ட்ரம்ப் அதிபரான பின்னர், தீவிர வரி விதிப்புகள் (Tariffs), ஈரானுடனான போர் காரணமாக உணவு மற்றும் எரிபொருள் விலைகள் வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டுள்ளன. உலக நாடுகளை அமெரிக்காவில் இருந்தே இயக்கலாம் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் வல்லாதிக்க மனநிலையால், உலகளாவிய பொருளாதாரம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.

அமெரிக்க சென்ட் தேர்தல்.. மண்ணைக் கவ்விய ட்ரம்ப் கட்சி.. சிக்கும் முக்கிய Corporate நிறுவனங்கள்?

காசாவில் ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் இஸ்ரேல் ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்ட வேளையில், இஸ்ரேலுடன் கைக்கோர்த்துவிட்டு, அமைத்திக்கான ‘நோபல் பரிசு’ வேண்டும் என அடம்பிடிக்கும் டிரம்ப், பிற நாடுகளின் மீது நடத்தும் தாக்குதல்களால், தமிழ்நாட்டு மக்களும் பல்வேறு பொருளாதார இடர்பாடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

அமெரிக்க செனட் சபையை எதிர்க்கட்சி (ஜனநாயகக் கட்சி) கைப்பற்றியதன் மூலம், அரசின் திட்டங்கள், நிர்வாக முடிவுகள், அரசின் செலவினங்கள் ஆகியவற்றை ட்ரம்ப் இனி தன்னிச்சையாக செய்ய முடியாது என்பதால் ட்ரம்ப் கண்காணிப்பு சூழலில் உள்ளார் என்றே கூறலாம்.

தற்போது வெளியாகியுள்ள இந்த தேர்தல் முடிவுகள், ட்ரம்பின் அதிகார அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் தாராளமயமாக்கல் கொள்கைகள், வரித்தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடற்ற வர்த்தகச் சூழலை அனுபவித்து வந்த தனியார் ஈக்விட்டி (Private Equity) நிறுவனங்களும் பெரு வங்கிகளும் இந்த முடிவால் பெரும் சிக்கலில் உள்ளது.

அமெரிக்க சென்ட் தேர்தல்.. மண்ணைக் கவ்விய ட்ரம்ப் கட்சி.. சிக்கும் முக்கிய Corporate நிறுவனங்கள்?

அதோடு கார்ப்பரேட்களின் வரித் தளர்வு முறைகேடுகள், நிதி முதலீடுகள் உள்ளிட்டவற்றின் மீது விசாரணைகள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் AI துறைக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், AI வருகையால் ஏற்பட்ட வேலையிழப்பு, மின்தட்டுப்பாடு போன்ற ட்ரம்பின் அதிகாரத்தால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து எதிர்க்கட்சி (ஜனநாயகக் கட்சி) நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரணை மேற்கொள்ள வலியுறுத்துவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக ட்ரம்ப் நெருக்கமாக இருக்கும் Google, Meta, Tesla, OpenAI, Microsoft, Apple, Amazon போன்ற நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. வரும் 2028-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிரம்பின் தோல்விக்கு இந்த முடிவுகள் ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories