தமிழ்நாடு

நிர்வாக சீர்கேடு.. மலிவு விலை வெங்காயம் கொள்முதலில் அலட்சியம்... த.வெ.க அரசின் அரசியல் நாடகம் அம்பலம்!

வெங்காய விலையை கட்டுப்படுத்த வேண்டிய த.வெ.க அரசு கொள்முதல் செய்த வெங்காயத்தையே தரமற்றது எனக் கூறி ரத்து செய்திருப்பது தவெக அரசின் அரசியல் நாடகத்தையும் நிர்வாக சீர்கேட்டையும் அம்பலப்படுத்தி இருக்கிறது.

நிர்வாக சீர்கேடு.. மலிவு விலை வெங்காயம் கொள்முதலில் அலட்சியம்... த.வெ.க அரசின் அரசியல் நாடகம் அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
S Muthukrishnan
Updated on

வெங்காய விலையை கட்டுப்படுத்த வேண்டிய த.வெ.க அரசு கொள்முதல் செய்த வெங்காயத்தையே தரமற்றது எனக் கூறி ரத்து செய்திருப்பது த.வெ.க அரசின் அரசியல் நாடகத்தையும் நிர்வாக சீர்கேட்டையும் அம்பலப்படுத்தி இருக்கிறது.

காய்கறி விலை, அரிசி விலை, மளிகை பொருட்களின் விலை தமிழ்நாட்டில் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் விலை 200 ரூபாய், பெரிய வெங்காயம் விலை 100 ரூபாய்.

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகள், கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.35க்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று த.வெ.க அரசு அறிவித்தது. இதற்காக, தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான NAFED நிறுவனத்திடம் இருந்து கிலோ ரூ.29 வீதம் 400 மெட்ரிக் டன் (4 லட்சம் கிலோ) வெங்காயம் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டது.

அப்படி ஆர்டர் கொடுத்த வெங்காயத்தை அக்டோபர் 31 ஆம் தேதி கொருக்குப்பேட்டையில் த.வெ.க அரசு அதிகாரிகள் ஆய்வு செய்த போது, வெங்காயம் 20 சதவிகிதம் முதல் 26 சதவிகிதம் வரை அழுகிய, முளைத்த, பூஞ்சை பாதித்ததாக இருக்கிறது என்பது உள்பட சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதையடுத்து அந்தக் கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டது.

நிர்வாக சீர்கேடு.. மலிவு விலை வெங்காயம் கொள்முதலில் அலட்சியம்... த.வெ.க அரசின் அரசியல் நாடகம் அம்பலம்!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கம் உண்மையிலேயே இருக்குமானால், வெங்காயத்தை கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகளை நேரில் அனுப்பி வைத்திருக்க வேண்டும் த.வெ.க அரசு. முன்கூட்டியே ஆய்வு செய்யாததால் ஏற்பட்ட குறைபாடு என்ன? தீபாவளி சமயத்தில் பொய் அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏழை - எளிய மக்களை ஏமாற்றுவதா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மலிவு விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதே த.வெ.க அரசின் முதன்மை பொறுப்பு. கொள்முதல் ஆணை ரத்து செய்வதோடு இந்த பிரச்னை முடிந்து விடுமா? இது, இன்னும் விலை ஏற்றத்துக்குதான் வழிவகுக்கும்.

மாற்று ஏற்பாடு என்ன? மக்களுக்கு மீண்டும் எப்போது மலிவு விலையில் வெங்காயம் கிடைக்கும். மக்களின் அன்றாடத் தேவைகளில் அரசியல் விளம்பரம் செய்வதா..? மலிவு விலை வெங்காயம் கொள்முதலில் அரசியல் நாடகம் அம்பலமாகி இருக்கிறது.

banner

Related Stories

Related Stories