அரசியல்

“மீண்டும் வருவேன்!” : பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்ட பிறகு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

“திமுக ஆட்சியின்போதே பெரியார் அறிவுலகத்தின் கட்டுமானப் பணிகள் 99.9% நிறைவடைந்துவிட்டது. அதனால், நல்லவேளை பெரியார் அறிவுலகத்துக்கு மூடுவிழா நடத்தாமல் திறந்து வைத்துள்ளார்கள்.”

“மீண்டும் வருவேன்!” : பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்ட பிறகு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தி.மு.க ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, தற்போது திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி பின்வருமாறு,

“திராவிட மாடல் அரசினுடைய கனவுத்திட்டமான பெரியார் அறிவுலகத்தை ஆசிரியருடன் இணைந்து பார்த்தேன். மீண்டும் ஒருமுறை இங்கு வந்து முழுமையாக அறிவுலகத்தை பார்வையிடுவேன்.

“மீண்டும் வருவேன்!” : பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்ட பிறகு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

திராவிடம், திராவிட இயக்கம், தந்தை பெரியார், பெரியாரின் கொள்கை ஆகியவை என்றால் என்ன என்று பெரியார் அறிவுலகத்திற்கு வந்து பார்த்து, தங்களது அறிவுத்திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தார் தலைவர் கலைஞர். அதனைத் தொடர்ந்து, என் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது.

திமுக ஆட்சியின்போதே பெரியார் அறிவுலகத்தின் கட்டுமானப் பணிகள் 99.9% நிறைவடைந்துவிட்டது. அதனால், நல்லவேளை பெரியார் அறிவுலகத்துக்கு மூடுவிழா நடத்தாமல் திறந்து வைத்துள்ளார்கள். த.வெ.க. அரசிடம் இருந்து பெரியார் அறிவுலகம் தப்பித்துவிட்டது.

நெல்லையில் காயிதே மில்லத் நூலகம், திருச்சியில் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் அமைக்கும் பணிகள் தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டன. அந்த நூலகங்களையும் இனி வரும் காலங்களில் திறக்க வேண்டும்.”

banner

Related Stories

Related Stories