
தமிழ்நாட்டில் தீபாவளி நாள் நெருங்கும் நிலையில், விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். இதெல்லாம் என்னவென்றே தெரியாது என்பதுபோல் முதலமைச்சர் விஜய்யோ இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
சிறைத்துறையில் பிரச்சனை, மின் துறையில் பிரச்சனை போன்றவற்றை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு, தற்போது திமுக, அதிமுக, பாஜக ஆகியோர் தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கின்றனர் என புதுக்கதையை அமைச்சர் நிர்மல் குமார் கிளப்பிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள திமுக தலைமைக் கழகம், தொழில்கள் முடங்குகின்றன. வருமானம் இல்லை. விலைவாசி விண்ணை தொடுகிறது. தினசரி கொலை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. நிறுவனங்கள் ஆந்திராவுக்கு செல்கின்றன. மின்கட்டணம் கழுத்தை நெரிக்கிறது. எதற்குமே இன்றைய தவெக ஆட்சியாளர்களிடம் தீர்வு இல்லை.
ரோடு ஷோ நடத்துகிறார்கள் அதுவும் மக்களுக்கு சலித்துவிட்டது. நேற்று பெருந்துறையில் அட்டர் ப்ளாப். வேறு வழி தெரியாமல் ஆட்சி கவிழ்ப்பு என்ற பழைய பல்லவியை தூக்கி கொண்டு வருகிறார் கலெக்சன் குமார்.
போலீஸ் உங்களிடம் இருக்கிறது; சிபிசிஐடி உங்களிடம் இருக்கிறது. நடவடிக்கை எடுங்கள். யார் தடுத்தார்கள்?
அதிமுக ஆட்களை எல்லாம் இழுத்து குதிரை பேரம் நடத்திவிட்டு திமுகவினரை குதிரை பேர வழக்கில் தேடுகிறோம் என்று ஒரு மாதத்தை ஓட்டினார்கள். கிணற்றில் போட்ட கல்லாக அதில் ஒரு முன்னேற்றமும் இல்லை. இப்போது மீண்டும் அதே கதை. அதே பிரேக்கிங் நியூஸ். இன்னொரு மாதத்தை ஓட்டலாம் என்று திட்டமா?
பண்டிகை காலத்தில் மக்கள் வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள். கொஞ்சமாவது அவர்களை குறித்து சிந்தியுங்கள். வெறும் பரபரப்பான செய்திகளை ஊடங்களுக்கு கொடுத்து கொண்டேயிருந்தால் வீடுகளில் உலை பொங்காது, என தெரிவித்துள்ளது






