இந்தியா

சில்லறைக்காக தகராறு.. ஓடும் பேருந்தில் பெண் நடத்துநரை உதைத்த பெண்.. 9 நாட்களுக்கு பிறகு நேர்ந்த சோகம்!

சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஓடும் பேருந்திலிருந்து பெண் நடத்துநர் தள்ளிவிடப்பட்டு உயிரிழந்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில்லறைக்காக தகராறு.. ஓடும் பேருந்தில் பெண் நடத்துநரை உதைத்த பெண்.. 9 நாட்களுக்கு பிறகு நேர்ந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த அக்.25-ம் தேதி தெலங்கானா மாநிலம் பத்ராசலம் என்ற பகுதியில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பல பயணிகளுடன் மௌனிகா என்ற பெண்ணும் தனது மகனுடன் பயணித்துள்ளார்.

அங்கும் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் தனது மகனுக்கு மட்டும் டிக்கெட் எடுப்பதற்காக ரூ.100 கொடுத்துள்ளார். இதனை கண்ட அந்த பேருந்தின் பெண் நடந்துநர் குண்ட்லா பிரவலிகா (24) என்பவர், ரூ.10-க்கான டிக்கெட்டை வழங்கிவிட்டு, தன்னிடம் சில்லறை இல்லை என்பதால் மீதி சில்லறை ரூ.90-ஐ இறங்கும்போது வாங்கிக்கொள்ளுமாறு அந்த டிக்கெட்டின் சீட்டின் பின்புறம் எழுதித் தந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பயணி மௌனிகா, தனக்கு உடனடியாக சில்லறை வேண்டும் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பெண் நடந்துநர் தன்னிடம் சில்லறை இல்லை என கூறியும், மீண்டும் மீண்டும் அந்த பயணி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இப்படியான சூழலில் பேருந்து மித்தகுடெம் என்ற கிராமத்தின் அருகே வந்தபோது இரண்டு பேருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியுள்ளது.

சில்லறைக்காக தகராறு.. ஓடும் பேருந்தில் பெண் நடத்துநரை உதைத்த பெண்.. 9 நாட்களுக்கு பிறகு நேர்ந்த சோகம்!

இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணி மௌனிகா, ஓடும் பேருந்தின் வாசலிலில் நின்றுகொண்டிருந்த நடத்துநர் பிரவலிகாவை எட்டி உதைத்துள்ளார். இதில் பேருந்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த பிரவலிகாவின் கால்கள் மீது பேருந்தின் பின் சக்கரங்கள் ஏறி இறங்கின. இந்த கோர சம்பவத்தில் அவரது வலது கால் முற்றிலும் நசுங்கியதுடன், இடது காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

படுகாயமடைந்த நடத்துநர் பிரவலிகாவை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே பெண் நடத்துநரை ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிட்டதாக, பயணி மௌனிகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 9 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த பிரவலிகா, நேற்று (நவ.03) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து பெண் நடத்துநரை ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட பயணி மௌனிகா மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories