தமிழ்நாடு

குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை - மேற்கு வங்க இளைஞர்கள் போக்சோவில் சிறையில் அடைப்பு!

குரோம்பேட்டையில் மேற்கு வங்க சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நண்பருடன் கணவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலிசார் சிறையில் அடைத்தனர்.

குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை - மேற்கு வங்க இளைஞர்கள் போக்சோவில்  சிறையில் அடைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் அழுது கொண்டு இருந்த பெண்ணிடம் அந்த வழியாக சென்ற சமூக ஆர்வலர் சென்று விசாரித்த போது, மேற்கு வங்கத்தை சார்ந்த அந்த இளம்பெண் தன்னை தன் கணவரின் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகவும் அழுது கொண்டே அந்த பெண் கூறினர்

இதை கேட்ட சமூக ஆர்வலர் குரோம்பேட்டை காவல் நிலையத்த்திற்குச் சென்று இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலிஸார் கணவன் மற்றும் அவரது நண்பரை கைது செய்து தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து தாம்பரம் மகளிர் காவல் நிலைய போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தபரோக் உசைன் (28), காலித் ஹசன்(24) ஆகியோர் மேற்கு வங்க மாநில பீர்பூம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இரண்டு பேரும் குரோம்பேட்டை பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகின்றனர் தெரியவந்துள்ளது.

மேலும், அதேப்பகுதியில் வேலைப்பார்த்து வந்த மேற்கு வங்க பெண்ணை, தபேரக் உசேன் ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துள்ளான். இந்நிலையில் அவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த நண்பன் காலித் ஹசன், நண்பனின் மனைவி மீது ஈர்ப்பு கொண்டு சிறுமி குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் சம்பவத்தன்று தனிமையில் இருந்த நண்பனின் மனைவியிடம் வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலிஸார் கணவர் மற்றும் அவரது நண்பர், சிறுமி உள்ளிட்ட மூன்று பேரையும் செங்கல்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி 15 வயது பெண்ணை காப்பகத்திற்கும், தபரோக் ஊசைன் மற்றும் காலித் ஹசன் ஆகிய இரண்டு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories