இந்தியா

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. செல்போனில் live Stream செய்த இளைஞர்கள்: ம.பி-யில் கொடூரம்!

மத்திய பிரதேசத்தில் சிறுமியை வன்கொடுமை செய்து அதை நண்கர்ளுக்கு லைவ் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி  மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..  செல்போனில் live Stream செய்த இளைஞர்கள்: ம.பி-யில் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு இரண்டு இளைஞர்கள் அறிமுகமாகியுள்ளனர். பிறகு அந்த இளைஞர்கள் மாணவியுடன் நட்பாகப் பழகி வந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் மாணவியை வெளியே அழைத்துச் சென்று அந்த இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இந்த கொடூர சம்பத்தை தங்களது நண்பர்களுக்கு செல்போனில் வைல் செய்துள்ளனர்.மேலும் இந்த வீடியோவை காட்டி அந்த மாணவிக்குத் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவியை வன்கொடுமை செய்த இளைஞருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு, வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோவை நண்பர் ஒருவர் அனுப்பியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனே திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

மேலும் அந்த வீடியோ ஆதாரத்தைக் காட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மாணவியை வன்கொடுமை செய்த இரண்டு இளைஞர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories