தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறை (Model Code of Conduct) அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டமன்றத் தொகுதிகளில் ஏப்ரல் மாதத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மொத்தமுள்ள 824 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களிக்க 17.4 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் வாக்களிக்க 5.67 கோடி வாக்காளர்கள் தகுதிபெற்றுள்ள நிலையில், அதில் 2.89 கோடி பெண்கள், 2.77 கோடி ஆண்கள் மற்றும் 7,617 மூன்றாம் பாலினத்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மொத்தம் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, ஏப்.23 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நகர் பகுதிகளில் 30,967 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட இருக்கிறது.

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 30 முதல் ஏப்.6 வரையிலான காலத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், தேர்தல் முடிவுகள் 5 மாநிலங்களிலும் மே.4 அன்று வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறை (Model Code of Conduct) அமல்படுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories