உலகம்

வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம்.. ஆத்திரத்தில் காதலன் மீது கார் ஏற்றி கொலை செய்த காதலி!

அமெரிக்காவில், காதலனை கார் ஏற்றி கொன்ற காதலியை போலிஸார் கைது செய்துள்ளனர்.

வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம்..  ஆத்திரத்தில் காதலன் மீது கார் ஏற்றி கொலை செய்த காதலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவின், இண்டியானாபோலி பகுதியைச் சேர்ந்தவர் கெய்லி மோரிஸ். இவர் ஆண்ட்ரோ ஸ்மித் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கெய்லிக்கு காதலன் ஸ்மித்து மீது சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் நினைத்துள்ளார்.

இதனால் காதலனின் நடவடிக்கையை ஆப்பிள் ஏர்டேக் கருவி மூலம் கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலன் வேறு ஒரு பெண்ணுடன் மதுபான விடுதியில் இருப்பதை மோரிஸ் கண்டுபிடித்துள்ளார். பிறகு உடனே அங்கு சென்று இரண்டு பேருடனும் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் அங்கிருந்த மதுபாட்டில் ஒன்றை எடுத்து அந்த பெண் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார்.

இதையடுத்து மதுபான விடுதி பாதுகாவலர்கள் மூன்று பேரையும் அங்கிருந்து வெளியே அனுப்பியுள்ளனர். பின்னர் வெளியே நின்றிருந்த காதலன் மீது மோரிஸ் காரால் மோதியுள்ளார். பின்னர் மூன்று முறை அவர் மீது காரை ஏற்றியுள்ளார். இதில் ஸ்மித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் ஸ்மித் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதையடுத்து காதலனை கார் ஏற்றி கொன்ற காதலி மோரிஸை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories