
சென்னையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு முடிவுற்றத் திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல் மகாலட்சுமி நகரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில், ரூ.ரூ.12.39 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புது வண்ணாரப்பேட்டையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் ரூ.19.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆர்.கே.நகர் நகர் விளையாட்டு வளாகத்தை துணை முதலமைச்சர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.
பிறகு ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.21.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தண்டையார்பேட்டை பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
இதையடுத்து ஏழை - எளிய மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இராயபுரம் தொகுதியில், ரூ.10.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘முத்தமிழறிஞர் கலைஞர் திருமண மாளிகையை’ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர், திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு, வார்டு-73, திருவேங்கடசாமி தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.5.01 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.






