இந்தியா

“அறையில் கிடந்த கார்பன் மோனாக்சைடு பாட்டில்” : பிரத்யுஷா வழக்கில் வெளியான பகீர் தகவல் - பின்னணி என்ன ?

பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா கரிமெல்லா வீட்டில் மர்மமான முறையில் இறந்துக்கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அறையில் கிடந்த கார்பன் மோனாக்சைடு பாட்டில்” : பிரத்யுஷா வழக்கில் வெளியான பகீர் தகவல் - பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரத்யுஷா கரிமெல்லா. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கும், பாலிவுட்டில் சில நடிகர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்ததார். பிரத்யுஷா. இதனிடையே அவரின் வீட்டில் இருந்து துருநாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வீட்டிற்குச் சென்று பார்த்தப்போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரத்யுஷா வீட்டின் குளியலறையில் மர்மமான முறையில் இறந்துக்கிடந்துள்ளார். இதனையடுத்து போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது போலிஸார் வீட்டை சோதனை செய்த போது, அவர் அறையில் கார்பன் மோனாக்சைடு பாட்டில் ஒன்று கிடந்தது. அதை சுவாசித்ததால் பிரதியுஷா உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் துப்பு துலங்கி வருகின்றனர்.

மேலும் பிரதியுஷாவை வலுக்கட்டாமய சுவாசிக்க வைத்திருப்பதற்கான வாய்ப்பு உள்ளதால், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பிரதியுஷா ஷாப்பிங் விவரகள், தொலைபேசி உரையாடல்கள் போன்றவற்றை போலிஸார் சேகரித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories