இந்தியா

நூபுர் சர்மாக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: உ.பி-யில் கொடூரம் !

உத்தரப்பிரதேசத்தில் நூபுர் சர்மாவை கைது செய்யக் கோாி போராட்டம் நடைபெற்றது

நூபுர் சர்மாக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: உ.பி-யில் கொடூரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நபிகள் நாயகம் பற்றி பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், அவர்களை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட் டம் நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ, பிரக்யாராஜ், மொரதாபாத், சகா ரன்பூர் ஆகிய இடங்களிலும் போராட் டங்கள் நடைபெற்றன.

உத்தரப்பிரதேசத்தில் நூபுர் சர்மாவை கைது செய்யக் கோாி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை வன்முறைக் களமாக மாற்றியதாகக் கூறி காவல்துறையினர் 136 பேரை கைது செய்துள்ளனர். மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இது குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் பிரசாந்த் குமார் கூறுகையில், சஹரன்பூரில் 45 பேர், பிரயாக்ரா ஜில் 37 பேர், அம்பேத்கர் நகரில் 23 பேர், ஹத்ராஸில் 20 போ்,மொராதாபாத்தில் 7 பேர், பிரோசாபாத் மாவட்டத்தில் இருந்து 4 பேர் என மொத்தம் 136 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றார்.

மேலும், உத்தர்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்ததாக இராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories