
இந்தியாவில் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் கிட்டத்தட்ட முடிவடைய உள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கும் 3 அணிகள் தற்போது வரை தகுதி பெற்றுள்ளன. இறுதிப்போட்டி மே 31ம் தேதி நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவிற்கு ஜூன் மாதம் 1 டெஸ்ட் போட்டில் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளன. இதற்கான இந்திய அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதில் ஜூன் 6 முதல் ஜூன் 10ம் தேதி வரை முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிக்கு சுப்மன் கில் தலைமையிலான அணியில், ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், தேவ்தத் படிகல், நிதிஸ் குமார், வாஷிங்டன் சுந்தர், குல்தீப், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மனவ் சுதர், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜூரல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அதேபோல் ஜூன் 14ம் தேதி தொடங்கும் ஒருநாள் போட்டிக்கான சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (VC), கேஎல் ராகுல் (WK), இஷான் கிஷன் (WK), ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய ஒருநாள் அணியில் முதல்தர போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் பிரின்ஸ் யாதவ், குர்னூர் ப்ரார் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்ஷ் துபேவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் அணியில் அறிமுக ஸ்பின்னர் மனவ் சுதருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் 4 வீரர்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.






