இந்தியா

"ஏர் இந்தியா விமானங்களை இயக்க தடை விதிக்க வேண்டும்" - உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் !

"ஏர் இந்தியா விமானங்களை இயக்க தடை விதிக்க வேண்டும்" - உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மே 20ம் தேதி, அஜய் பன்சால் என்பவரும், அவரது மனைவியும் டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமான மூலம் சிகாகோ சென்றதாகவும், விமானம் நடு வானில் பறக்கும் வரை விமானத்தின் ஏசி செயல்படவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா சார்பில் 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. எனினும் இதனால் பிற பயணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் இது குறித்து நீதிமன்றத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.

"ஏர் இந்தியா விமானங்களை இயக்க தடை விதிக்க வேண்டும்" - உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் !

அதன்படி, ஏர் இந்தியா போயிங் ரக விமானங்களில் பாதுகாப்பு சோதனைகள் முடிவடையும் வரை விமானங்களை இயக்க தடை விதிக்க வேண்டும், புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமானத்தில் தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories