
ஐபிஎல் 2026 தொடர் எப்போது ஆரம்பமாகும் என்று நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அதன் அட்டவணையின் முதல் கட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தொடக்கமாக முதல் 20 போட்டிகளுக்கான தேதி மற்றும் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் 84 போட்டிகள் நடைபெற உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற 74 போட்டிகளை விட இது அதிகமாக இருப்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய ஐபிஎல் சீசனாக இது அமைய உள்ளது.
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணியே இந்த ஆண்டு நடப்புச் சாம்பியனாக இருப்பதால், கோப்பையை மீண்டும் தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் களமிறங்க உள்ளது.
ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 28 ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 84 போட்டிகள் நடைபெறும் இந்த தொடரில் பிளேஆஃப் சுற்று மே 26 ஆம் தேதி தொடங்கும். இறுதிப்போட்டி மே 31 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது. முழு அட்டவணை இன்னும் வெளியாகவில்லை என்றாலும், முதல் 20 போட்டிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை:
மார்ச் 28 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பெங்களூர் – இரவு 7:30
மார்ச் 29 – மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை – இரவு 7:30
மார்ச் 30 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – குவாஹாத்தி – இரவு 7:30
மார்ச் 31 – பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – முல்லான்பூர் – இரவு 7:30
ஏப்ரல் 1 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் – லக்னோ – இரவு 7:30
ஏப்ரல் 2 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா – இரவு 7:30
ஏப்ரல் 3 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – சென்னை – இரவு 7:30
ஏப்ரல் 4 – டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – டெல்லி – பிற்பகல் 3:30
ஏப்ரல் 4 – குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் – அகமதாபாத் – இரவு 7:30
ஏப்ரல் 5 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ஹைதராபாத் – பிற்பகல் 3:30
ஏப்ரல் 5 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் – இரவு 7:30
ஏப்ரல் 6 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா – இரவு 7:30
ஏப்ரல் 7 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – குவாஹாத்தி – இரவு 7:30

ஏப்ரல் 8 – டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி – இரவு 7:30
ஏப்ரல் 9 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கொல்கத்தா – இரவு 7:30
ஏப்ரல் 10 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குவாஹாத்தி – இரவு 7:30
ஏப்ரல் 11 – பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – முல்லான்பூர் – பிற்பகல் 3:30
ஏப்ரல் 11 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் – சென்னை – இரவு 7:30
ஏப்ரல் 12 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – லக்னோ – பிற்பகல் 3:30
ஏப்ரல் 12 – மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை – இரவு 7:30
தற்போது வெளியிட்டுள்ள முதற்கட்ட அட்டவணைப்படி El Clasico என வர்ணிக்கப்படும் CSK vs MI போட்டிகள் இல்லாதது, ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
2026 ஐபிஎல் தொடரில் குவாலிஃபையர் 1 மே 26 அன்று பெங்களூரில் நடைபெறும். எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2 போட்டிகள் அகமதாபாத் மற்றும் ராய்ப்பூரில் நடைபெற வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இறுதிப்போட்டி மே 31 அன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பெங்களூர், டெல்லி, மும்பை, ஹைதராபாத், ராய்ப்பூர் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் நடைபெற உள்ளதால் ஐபிஎல் அட்டவணையை இரண்டு கட்டங்களாக வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதனால் முதற்கட்டமாக 15 நாட்களுக்கான போட்டிகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள போட்டிகளின் அட்டவணை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






