தமிழ்நாடு

அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!

குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 45 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை  வழங்கினார் முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 45 நபர்களுக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 45 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 11.3.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 45 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை  வழங்கினார் முதலமைச்சர்!

குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் உள்ள அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 வழக்குரைஞர்கள், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் பெருநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் குற்ற வழக்குகளை நடத்துவர். அத்துடன் அவர்கள் மாற்றுப் பணியில் பல்வேறு அரசுத் துறைகளில் சட்ட ஆலோசகர்களாக பணிபுரிவர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2ல் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றிற்கு பின் அப்பணியிடத்திற்கு 45 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 45 நபர்களுக்கு அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் அவர்கள் 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

banner

Related Stories

Related Stories